Saturday, March 15, 2014

என் முகநூலில் முகம் பதித்தவை!

ஆமை நகரத் தொடங்கினா அதன் ஐந்து உறுப்புகளும் வெளியே நீட்டிக் கொள்ளும் ! ஆபத்துன்னு தெரிஞ்சா,
உடன்,அவற்றை தன் ஓட்டுக்குள்ளே அடக்கிக் கொள்ளும்!
அதுபோல மனிதனும் சூழ்நிலையை உணர்ந்து தன்னுடைய
ஐம்புலன்களையும் அடக்கிக் ஆளத் தெரிந்தவனாக ,இருந்தால்
தனக்கு வரும் எல்லா ஆபத்துக்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளலாம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து- குறள்பொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது
அடக்கியே வாழ வேண்டும்! வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் ! நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான்! ஒருவன் , புலன்களில் எதனை அடக்க
முடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்

தகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்
என்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்துவது
இன்புறத் தக்கது!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டுகுறள்


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பாங்க! இதில் பத்து என்பது எண்ணிக்கையல்ல! எல்லாமே பறக்கும் என்பதே ஆகும். எடுத்துக் காட்டாக, ஆசைகளைத் துறந்து தவம் செய்யும் முனிவனோ, ஏன், மானம், கல்வி, செல்வம் என, மற்ற பிற உயர்வுகள் , அனைத்தும் பசி வரின் பறந்துதான் போகும்!

தாம் பெற்ற மக்களை , உலகோர், சான்றோர் என போற்றும்படி செய்வதே, தாய் தந்தையருக்கு அழகாம்!

சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு-ஔவை


ஒருவரை வணங்கி, அதன் மூலம் உண்டு வாழ்வதைக்காட்டிலும்,பூமியை உழுது பயிரிட்டு வரும் வருவாயைக் கொண்டு , உண்டு வாழும் உணவே மிக
இனிமையும் சுவையும் உள்ளதாகும்

தொழுது ஊண் சுவையின் ஊழுது ஊண் இனிது-ஔவை

நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய வலிமையை அறிந்து அதற்கேற்ப செயல் படவேண்டும்! இல்லையெனில் தோல்விதான் மிஞ்சும்! எதுபோல என்றால், மிகவும் மெலிதான மயிலிறகு கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வலிமை மிக்க அச்சும் உடைந்துதான் போகும்! அதுபோல!

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

 1. ஆமையின் செயல்பாட்டில் எவ்வளவு பெரிய செய்தி மறைந்து கிடக்கிறது.
  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 2. சிறப்பான குறள்களோடு தங்களின் குரலும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. ஐம்புலன்களை அடக்குவது சாதாரண காரியமா ,ஆமை சுலபமாக ஐந்து உறுப்புகளை உள்ளிழுத்து கொளவது போல் ?சிந்திக்கவைக்கும் ஒப்புமை !தொடர்கிறேன் அய்யா உங்களின் திருக் 'குரலை '!
  த ம 3

  ReplyDelete
 4. பசி வந்தா பத்தும் பறக்கும் என்பாங்க! இதில் பத்து என்பது எண்ணிக்கையல்ல

  ReplyDelete
 5. அருமையான முகப்புத்தக இற்றைகள்.....

  இங்கேயும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 6. குறட்பாக்களும் விளக்கங்களும் மிக சிறப்பு ஐயா!

  ReplyDelete
 7. அருமையான குறள் விளக்கம்
  வரவேற்கிறேன்.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...