Saturday, April 26, 2014

கடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே ! –எனவே காணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே!




முடிந்தவரை கருத்துகளை  எழுதி  வருவேன் –சற்று
     முடியாத திலைதனிலும்  முயன்று  தருவேன்!
விடிந்தவுடன் காணுவது  கணினி  தானே –தனிமை
      வேதனையை, அறியாது  மகிழ  நானே!
வடிந்துவிட்ட  வாய்க்காலாய்  வாழ மாட்டேன் –நீரே
     வருகின்ற வழிதனிலே  ஓய மாட்டேன்!
கடந்திட்டேன்  ஓரளவு வலியின்  துயரே ! –எனவே
    காணவந்தேன்  உறவுகளே நீரென்  உயிரே!

சிலநாட்கள் ஓய்வாக  இருந்த  போதும் – மேலும்
    சிந்தனைகள்  அலையாக  வந்தே  மோதும்
பலநாட்கள்  ஆனதுபோல்  உள்ளச் சோர்வே –சதா
    படுக்கையிலே  கிடப்பதனால் உடலில்  வேர்வே!
அப்பப்பா  கொடுமையது ! தாங்க  இயலா! – மருத்துவர்
    அறிவுரைக்கு  ஏற்பநாளும்  முயல!
எப்பப்பா என்றேநான் காத்துக்  கிடந்தேன் –மீண்டும்
    எழுதிடவே துணிவாக , நன்றிவந்தேன்!

புலவர்  சா  இராமாநுசம்
  

13 comments :

  1. தாங்கள் உடல் நலம் தேறியது மிக்க மகிவினை அளிக்கின்றது ஐயா

    ReplyDelete
  2. எண்ணம் முழுதும் வலைப்பூவில் இருக்கையில், இருக்கும் வலியும் விரைவில் பறந்திடும் அய்யா !
    த ம ௨

    ReplyDelete
  3. கவலை வேண்டாம் ஐயா... நாங்கள் இருக்கிறோம்...

    ReplyDelete
  4. உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி ஐயா....

    ReplyDelete
  6. ஓய்வு எடுத்து மீண்டும் எழுத வந்ததில் மகிழ்ச்சி...... சில சமயங்களில் ஓய்வும் தேவை தான் ஐயா.....

    ReplyDelete
  7. நிச்சயம் கணினி ஒரு துணைதான்.
    மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டு ஒய்வு எடுங்கள் ஐயா!

    ReplyDelete
  8. உள நலம், உடல் நலம் பேணுங்கள்! ஐயா!
    இயல்பாய் வரும் இலக்கியம் மின்னட்டும்!

    ReplyDelete
  9. இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் கவிகளை படிப்பது மகிழ்ச்சி ஐயா!!

    ReplyDelete
  10. தொடர்ந்து எழுதித் துவளாமல் நின்றால்
    உடல்வலி ஓடும் உருண்டு!

    தொடருங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  11. மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி.

    உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம்.

    ReplyDelete
  12. உங்கள் தளர்வடையா தன்னம்பிக்கை வென்றது. நன்னம்பிக்கை வந்தது. மீண்டும் மீண்டும் கவிதைகள வார்த்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...