Monday, July 14, 2014

அன்றும் இன்றும் ஒன்றே!



, இனிய உறவுகளே! வணக்கம்!

கடந்த,2013-பிப்ரவரி நான் எழுதிய கவிதை இன்றும் பொருந்துவதை காணுங்கள்!

ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. அன்றும் இன்றும் ஒன்றே!
    என்றே இந்நிலை மாறும்!

    ReplyDelete
  2. மக்கள் சிந்தித்துப் பார்த்து வோட்டு போட்டும் 'பழைய குருடி கதவைத் திறடி 'கதை தான் தொடர்கிறதே !
    த ம 1

    ReplyDelete
  3. பி.எஸ்.வீரப்பா சொன்ன வசனம்தான் ஞாபகத்திற்க்கு வருகிறது ஐயா. எனது ஹிந்தமிழ் காண்க....

    ReplyDelete
  4. அன்றும்
    இன்றும்
    என்றும்
    பொருந்தும்
    கவிதை
    நன்றி ஐயா
    தம 2

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.
    காலம் உணர்ந்து தந்த கவிகண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இனி மாறுவது சிரமம் தான் ஐயா...

    ReplyDelete
  7. அன்றும் இன்றும் ஒன்றே...
    பொறுத்தமான கவிதை ஐயா...

    ReplyDelete
  8. உண்மைதான் ஐயா . நிலையில் மாற்றம் இல்லாதது வருத்தம் தருகிறது, நாளைக்கும் இக் கவிதை பொருந்தத்தான் போகிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...