Friday, August 1, 2014

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி, மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஒயவில்லை –தினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை
எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ!
ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே
உழுவார்க்கு ஊக்கதெகை ! நெல்லுக்கே மறுப்பதா!- இந்த
உலகுக்கே அச்சாணி! அவன்கழுத்தை அறுப்பதா!
எழுவாரா ! தொழில்செய்ய! எண்ணுவாரா! மத்தியிலே -உடன்
ஏற்றிடுவீர் ! சிந்தித்து மாற்றமது புத்தியிலே!

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. மாற்றம் மக்கள் மனதில் வேண்டும் ஐயா
    மாறாவிடில் சிக்கல் தீராது என்றும் ஐயோ

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    எல்லாம் பேச்சுதிறமைதான் செயல் வடிவம் இல்லை.. அழகாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வோட்டு கேட்டு வரும் போது ஒரு பேச்சு
    ஜெயிச்ச பிறகு சொன்னதெல்லாம் போச்சு !
    த ம 1

    ReplyDelete
  4. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
  5. நிச்சயம் நிலைமை மாறும் ஐயா
    தம2

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...