Sunday, January 25, 2015

குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே



குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்  ஒன்றே –உண்மைக்
    குடியரசாய்  கொண்டாடி  மகிழ்வோம்  நன்றே -மேகம்
இடியிடித்தும்  மழையின்றி  போதல்  போல – வீணே
     எண்ணற்ற தியாகிகளின்  தியாகம்  சால -அழிந்து
தடியெடுத்தோர் ஆளுகின்ற நிலைதான்  கண்டோம்- நாளும்
     தாங்கிடவே  இயலாத்  துயரே!  கொண்டோம் –நல்ல
முடிவெடுத்து  வாக்குகளைப்  போட  வேண்டும் –என்ற
    முடிவொன்றே குடியரசு  வாழ்த்தாம்  ஈண்டும்
                    புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

  1. உண்மைக் குடிமகனின் வருத்தம் ,டாஸ்மாக் நடத்தும் அரசின் காதுக்கு எட்டுமா ?
    த ம 1

    ReplyDelete
  2. இந்தியக் குடியரசு "குடி" யை ஒழிக்கும் நாள் என்நாளோ?!

    ReplyDelete
  3. உண்மை ஐயா அனைத்தும் உண்மை
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...