Saturday, October 19, 2013

வாழ்த்துங்கள் உறவுகளே! என்னை நன்றே! –என் வயததுவும் எண்பத்து ஒன்றாம் இன்றே!

வாழ்த்துங்கள் உறவுகளே! என்னை நன்றே! –என்
    வயததுவும் எண்பத்து  ஒன்றாம்  இன்றே!
ஆழ்த்துங்கள் மகிழ்விலேநான்  மிதந்து  போக –நம்
    அன்னைதமிழ்  என்றுமென்  துணையாய்  ஆக
வீழ்த்துங்கள் தமிழின  துரோகி  தம்மை – என்
    விருப்பமது!! இதுஒன்றே! வேண்டி  உம்மை
தாழ்த்திட்டே தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்
     தமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும்  மேலும்!

முடிந்தவரை வள்ளுவனின வழியில் வாழ்ந்தேன்!- அது
     முடியாத  போதெல்லாம்  துயரில் வீழ்ந்தேன்
கடிந்தொருவர்  சொன்னாலும் பொறுத்துக்  கொண்டேன்- ஏற்ற
     கடமைகளை செய்வதிலும்  வெற்றி  கண்டேன்
விடிந்தவுடன்  இருள்விலகி  செல்லல் போன்றே- என்
     வேதனைக்கு வடிகாலாய் வலையும்  தோன்ற
மடிந்துவிட்ட  என்துணைவி  வரமே  தந்தாள்- என்றும்
      மறவாத  கவிதையென நாளும்  வந்தாள்!

ஆகின்ற காலமெனில்  அனைத்தும்  ஆகும் –அது
      ஆகாத காலமெனில்  அனைத்தும்  போகும்
போகின்ற போக்கெல்லாம் மனதை விட்டே –பின்
      புலம்புவதால் பயனுண்டா வாழ்வும்  கெட்டே
நோகின்ற நிலையெவர்கும் அறவே  வேண்டாம்-நல்
     நோக்கம்தான் அழியாத அறமே ஈண்டாம்
சாகின்ற வரைநானும் கவிதை  தருவேன் –வலை
     சரித்திரத்தில் எனக்குமோர் இடமே  பெறுவேன்


                   புலவர்  சா  இராமாநுசம்

63 comments :

 1. தங்களின் பிறந்தநாளில் தங்களிடம் ஆசி வேண்டி வணங்குகிறேன்.
  அடுத்த வெளிநாடு சுற்றுலா சிறக்க வேண்டுகிறேன் .

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா

  இனிய பிந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
  பல்லாண்டு காலம் வாழ்க இறைவனை பிரத்திக்கிறேன் ஐயா
  .............................................................................
  வலையுலகில் அறிவுப்பசியாக
  வாடிய உள்ளங்களுக்கு விருந்தாக
  பல கவிதைகள் கதைகள் என்று
  நல்சுவை படைத்த புலவர் ஐயா
  உங்கள் பணியை மட்டும்மல்ல உங்களையும்
  இன் நன்நாளில்இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா !
  த.ம 2

  ReplyDelete
 4. இனிய பிந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பதிவின் மூலமும் தொடர் பழக்கத்தின் மூலம்
  நல்வழிகாட்டும் பெருந்தகை நீங்கள்
  நூறாண்டு கடந்தும் நலத்தோடும்
  இதே புன்னகை முகத்தோடும் வாழ
  எல்லாம் வல்லவனை
  இன்றும் வேண்டிக் கொள்கிறோம்

  ReplyDelete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா !

  // என்றும்
  மறவாத கவிதையென நாளும் வந்தாள் //

  என்றும் உங்கள் துணைவி உங்களுடன் கவிதையாய் வர
  வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! மகளே!

   Delete
 7. புலவர் ஐயா, 81-ஆம் அகவையில் பாட்டெழுதும் உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால், பிழைகளோடு மரபுப்பா எழுதுவது தவறல்லவா? காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் எழுதத் தொடங்கி அதனை முழுமையாகப் பின்பற்றாததேன்? புலவருக்குப் படித்தவருக்கு 'எண்பத்து ஒன்றாம்' என்பது 'எண்பத் தொன்றாம்' என்று புணரும் என்த தெரியாததேன்? இன்னும்... சொல் புணர்ச்சியில் கடமைகளை செய்வதிலும்
  இருள்விலகி செல்லல்
  போன்ற பிழைகளைத் தவிர்க்காததேன்? இன்னும்.... வேண்டாம், பாட்டு எழுதிய பின்ன்னர்த் தக்கவர்களிடம் திருத்தம் பெற்று வலையில் எழுதுவது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. 81 ஆண்டுகளில் மறதி இருக்கும். அவர் எழுத்தைப் பாராட்டுவதே நல்லது. பாராட்டா விட்டாலும் குறை கூறாமல் இருப்பது நல்லது.

   Delete
  2. மிக்க நன்றி!

   Delete
  3. விவாதம் வேண்டாம் ! விடுங்கள் தமிழ நம்பி! மறதி, கண் பார்வை குறை, தட்டச்சு பழக்கமின்மை முதுமை, முதுகு வலி இப்படி எத்தனையோ குறைகள் இருந்தாலும் ஏதோ முடிந்த அளவு எழுதுகிறேன்

   Delete
 8. வாழ்த்துகள்.......

  ReplyDelete
 9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 11. வாழ்க வளமுடன்...

  ReplyDelete
 12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!
  பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 14. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வளமுடன் வாழ்க

  ReplyDelete
 15. ஐயா!...
  உங்கள் பிறந்த தினமாகிய இன்று மட்டுமல்ல என்றுமே உங்கள் உடல் உள நலனுக்காக மனதார இறை அருளை வேண்டுகிறேன்!

  உங்கள் பணி சிறக்க என்றும் திருவருள் துனை நிற்கும்!

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

  ReplyDelete
 16. உங்களைப் போன்றவர்களின் ஆசிதான் எங்களை வழிநடத்தும்...
  தங்களின் பிறந்தநாளில் என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா.

  ReplyDelete
 17. பல்லாண்டுகள் நலமுடன் வாழ இறையருளைப்பிரார்த்திக்கிறோம் ஐயா..

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

  ReplyDelete
 18. // சாகின்ற வரைநானும் கவிதை தருவேன் –வலை
  சரித்திரத்தில் எனக்குமோர் இடமே பெறுவேன் //

  வலையினிலும் வலைப்பதிவர் மனதிலும் என்றோ நீங்கா இடம் பெற்றுவிட்ட உங்களுக்கு, எனது தந்தையைப் போன்ற உங்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. பிந்திய இனிய பிந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
  பல்லாண்டு காலம் வாழ்க இறைவனை பிரத்திக்கிறேன் ஐயா
  ..........................................................................

  ReplyDelete
 20. நலமுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டுகின்றோம். இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. ஐயா! தாங்கள் பால்லாந்து வாழ்ந்து இன்னும் கவிதை பல படைத்திட இறைவனை வேண்டுகின்றேன்.
  நல்லதொரு நாளில் அருமையான கவி படைத்துவிட்டீர் ஐயா!

  ReplyDelete
 22. பல்லாண்டுகள் நலமுடன் வாழ இறையருளைப்பிரார்த்திக்கிறோம் ஐயா..

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..! வணக்கங்கள்.

  ReplyDelete
 23. ஐயா, இந்த நன்னாளில் தங்களை வணங்கி மகிழ்கின்றோம் ஐயா.
  வலை உலகில் நீங்கா தனி இடத்தினை ஏற்கனவே பெற்று விட்டீர்கள் ஐயா.

  ReplyDelete
 24. நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 25. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா! நன்றி!

  ReplyDelete
 26. மிக்க நன்றி

  ReplyDelete
 27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா!

  ReplyDelete
 28. நல்லுள்ளம் கொண்ட பெருந்தகையே
  சொல்வளம் கொண்ட பாவலரே
  குறையாத வளமும் குன்றாத நலமும் பூண்டு
  நீடூழி வாழ்ந்திட
  எமையாளும் ஈசனும் ..
  நற்றமிழாளும் உங்களுக்கு ஆசிகளை பொழியட்டும்..
  என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 29. அன்னைத் தமிழ்பால் அருந்தி அதையிங்குப்
  பொன்னாய்ப் பதிக்கும் புலவரே! - தென்மொழிபோல்
  குன்றாப் புகழும் குறையா வளமுடன்
  என்றென்றும் வாழ்க இனிது!

  ReplyDelete
 30. அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா. இனி வரும் நாட்கள் யாவும் நலமாய் அமைந்திடவும், தமிழால் எம்மைத் தாலாட்டும் தங்கள் பணி இனிதே தொடரவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 31. தங்களை வாழ்த்த நாங்களா...

  தங்களின் வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு வேண்டும்...
  வாழ்க்கையின் அனைத்தையும் அறிந்த தாங்கள் எங்களோடு தொடர்பில் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம்தான்....


  கடவுள் தங்களுக்கு துணையிருப்பார்....

  ReplyDelete
 32. மிக்க நன்றி! சௌந்தர் !

  ReplyDelete
 33. இறைவனிடம் என்ன கேட்பதென்று யோசிக்கின்றேன்
  உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தர யாசிக்கின்றேன்
  பதிவுலக பிதாமகர் தங்களை நானும் நேசிக்கின்றேன்
  மகிழ்வுடன் வாழ வாழ்த்துப்பா ஒன்று வாசிக்கின்றேன்!
  ஓம் நமச்சிவயா!ஓம் நமோ நாராயணாய!
  பிறந்த நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 34. வீழ்த்துங்கள் தமிழின துரோகி தம்மை – என்
  விருப்பமது!! இதுஒன்றே! வேண்டி உம்மை
  தாழ்த்திட்டே தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்
  தமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும் மேலும்! //

  இன்பத் தமிழைத் தினமும் சுவைக்கும்
  இனிய மனமே வணங்குகின்றேன் உன்றன்
  கண்கள் ஏந்திய கனவு பலிக்கும்
  கவலை வேண்டாம் எந்நாளும் ......

  மரபுக் கவிதை மன்னனே எம்
  மனதில் தவழும் தந்தையே
  இறைவன் ஆசி பெற்று மேலும்
  இனிதாய்த் தொடரணும் ஆயுள் நூறும் ..

  தமிழே உன்னை வாழ்த்தி நிற்கும்
  தளரா மனமதைப் போற்றி நிற்கும்
  இரவல் இல்லா வார்த்தைகளால் எம்
  இதயம் தொட்ட நல்லவரே ...........

  வாழ்த்தும் உன்றன் மனதாரா நாம்
  வாழ்த்துப் பெற்றிட வந்தோமே
  தில்லைக் கூற்றன் அருளுக்கிணையான
  தித்திப்பான நன் நாளும் இது தானே ..!!

  ReplyDelete
 35. எண்பத்தி ஒன்றாம் அகவையில் அடி எடுத்து வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கு மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  நிறை ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று சந்தோஷமாக சௌக்கியமகா என்றென்றும் இருந்திட இறைவனிடம் என் பிரார்த்தனைகள் அப்பா...கவிதை சிறப்பு.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...