Thursday, February 12, 2015

தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!உறவுகளே!
நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே
இக்கவிதை!!!!!!

தன்னலம் ஏதும் இன்றி- யாரும்
தன்கென நிகரும் இன்றி!
இன்னலே நாளும் கொண்டார் –காந்தி
இந்திய விடுதலைக் கண்டார்!
மன்னராய்ப் பலரும் இங்கே –பதவி
மகுடமே சூட எங்கே?
பொன்நிகர் விடுதலைக் காணோம்-அந்தோ
போயிற்று அனைத்தும் வீணாம்!


தேசத்தின் தந்தை நீரே –என்று
தெரிந்தவர் எத்தனைப் பேரே!
நாசத்தை நாளும் செய்தே –சொந்த
நலத்தையே பயனாய் எய்தே!
மோசத்தை, சட்டம் ஆக்கி –என்றும்
முடிவிலா வறுமை தேக்கி!
பேசத்தான் வழியே இல்லை! –எதிர்த்து
பேசிடின்! வருதல் தொல்லை

ஊற்றென ஊழல் ஒன்றே –இன்றே
உலவிட நாட்டில் நன்றே!
காற்றென வீசக் கண்டோம் –துயரக்
கண்ணீரால் கவிதை விண்டோம்
ஆற்றுவார் எவரும் உண்டோ! –தூய
அண்ணலே உமதுத் தொண்டோ!
போற்றுவார் எவரும் காணோம் –அந்தோ
போயிற்று அனைத்தும் வீணாம்

புலவர் சா இராமாநுசம்

20 comments :


 1. அய்யா. உங்களின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கின்றேன். யாரோ சிலர் சொல்வதால் உண்மை பொய்யாகிவிடாது. கவிஞனின் கோபமும் ஆதங்கமும் வீண் போகாது. காத்திருப்போம் இவர்கள் மாறுவார்கள் என்று!

  ReplyDelete
 2. உத்தமரை போற்றவேண்டாம் ,தூற்றாமல் இருந்தாலே போதும் .இன்று இளைஞர்கள் ,மாணவர்கள் எங்குமே ஒரு அலக்ஷியம்.மரியாதை,பண்பு ஒழுக்கம் என்பது கல்லூரி பட்டங்கள் பட்டங்கள் கற்பிப்பது இல்லை.பணம் பணம் பணம்....

  ReplyDelete
 3. சிலர் சொல்வதால் உண்மை பொய்யாகிவிடாது
  என்னும் நடனசபாபதி ஐயா அவர்களின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன் ஐயா
  தம +1

  ReplyDelete
 4. இவர்கள் தங்களுக்கே குழி பறித்துக் கொள்கிறார்கள் என்பதை சொல்லத்தான் வேண்டுமா ?
  த ம 3

  ReplyDelete
 5. நல்லதொரு மாற்றம் ஒரு நாள் வந்தே தீரும் ஐயா...

  ReplyDelete
 6. அண்ணலை அவமதிக்கும்
  அறம் அறியா ஆட்கள்தம்மை
  வன்மையாய் கண்டிக்கின்றோம்.
  வாழிய புகழ் அண்ணல் பிதா.

  ஆதங்கம் தேவை இல்லை
  அறிவிலிகள் கூற்றை கேட்டு-நன்றே
  வேதங்கள் படித்திருந்தால் - அதன்
  வியாக்கியானம் புரிந்திருந்தால்
  விபரீத விமர்சனங்கள் -இங்கே
  விதைப்பனரோ விஷம் கலந்து?

  கோ

  ReplyDelete
 7. உலகுத்துக்கே புதிய போராட்ட முறையை கற்பித்த அண்ணலை இழிவு படுத்துதல் மிக தவாறானது .பாரதிஈய ஜனதா இந்தப் போக்கை மாற்றிக்கொள்வது நல்லது.
  நம்மவர்களின் பெருமை நம்மவரளுக்கு தெரிவதில்லை என்பது வேதனை /
  பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னார்
  Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.”

  ReplyDelete
 8. அந்த
  அம்மாவுக்குக் கொஞ்சம்
  உள (மன) நோய்.

  எந்தக் காலத்தில் எவர் வந்தாலும்
  உலகம் போற்றும்
  காந்தி அவர்களின் உண்மை நிலை
  ஒரு போதும் மங்காது என்று
  முழங்கு தமிழா!

  ReplyDelete
 9. வணக்கம்
  ஐயா
  காலம் உணர்ந்து கவி வடித்த விதம் கண்டு மகிழ்ந்தேன்.. த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. காந்தியின் பெருமையை சிறுமையாக முடியாது ஐயா.

  ReplyDelete
 11. ஆயுதங்களாலே மட்டுமே
  சாதிக்கமுடியுமென
  வாதிட்டவர்களிடையே அஹிம்சை எனும்
  ஆயுதமே பலமானது என்று அறிமுகம் செய்தவன்.
  அவர் பற்றி அறியாதவர் சொல்வது அறியாமையாலா?
  அல்லது அகங்காரத்தலோ?

  ReplyDelete
 12. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...