Monday, March 23, 2015

வழுவாகும்! சட்டத்தைத் திரும்பப் பெறுவீர் –உழவர் வாழ்கின்ற வழிதன்னை விரும்பித் தருவீர்



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை!
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம்மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் எழுத்தாம்!
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கேஎடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்கே!
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியேஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலோ  ஒயவில்லைதினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரோ  காயவில்லை
உழுவார்க்கு  உழுநிலமும்  உரிமை  உண்டா –அதனை
உடைக்கின்ற  சட்டமது செய்தல்  தொண்டா
எழுவாரா ! தொழில்செய்ய   எண்ண வேண்டும்-அவர்
இல்லையெனில் மண்ணைத்தான்  உண்ண வேண்டும்
வழுவாகும்! சட்டத்தைத்  திரும்பப்  பெறுவீர் –உழவர்
வாழ்கின்ற வழிதன்னை விரும்பித்  தருவீர்

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது :)

    ReplyDelete
  2. நல்ல கவிதை அய்யா

    உழுவார்க்கு உழுநிலமும் உரிமை உண்டா –அதனை
    உடைக்கின்ற சட்டமது செய்தல் தொண்டா
    எழுவாரா ! தொழில்செய்ய எண்ண வேண்டும்-அவர்
    இல்லையெனில் மண்ணைத்தான் உண்ண வேண்டும்


    நீங்கள் மண்ணீன் புலவரய்யா

    ReplyDelete
  3. அருமையாச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  4. விவசாயத்தின் அருமையாய் எந்த அரசும் உணர்ந்ததகத் தெரியவில்லை. அருமையான கவிதை ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...