Friday, March 6, 2015

முகநூல் வித்துக்கள்!


  புலவர்  குரல்
------------


மிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்களே சமுதாயத்தில் வாழவும் முன்னேறவும் முடிகிறது! அதுமட்டுமல்ல! அவர்களே வாழத் தெரிந்தவர்களாக உலகம் சொல்கிறது ! செய்த ,சிறு தவற்றையும் பெரிதாக்கிக் கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருந்தால் இந்த காலத்தில் வாழமுடியாது

சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை!
ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!


உண்மையான காதல் தன்னலமற்றது! மற்றவருடைய இன்பத்தில் தான் இன்புறுவதும் துன்பங் கண்டு தான் துன்புறுவதும் என்று இருப்பதே காதலின் தூய்மைக்கு உரிய அடையாளமாகும்

வாழ்க்கையில் தவறே செய்யாதவர்களைக் காண்பது அரிது! தவறு செய்பவர்கள் அனைவரையும் திருத்திவிட இயலாது ! திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும்! கிளிக்குத் தான் பேசக் கற்றுத் தரமுடியும் ! குருவிக்கிக் கற்றுத் தர இயலுமா?

பிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்! அதாவது அன்பு என்பது அதையே கொடுத்து பெற வேண்டிய ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. பிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்
    அருமையான வாழ்வியல் தத்துவம் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. என்றும் முதல் வருகை! !!தாங்களே! நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை!
    ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!///
    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  4. அனைத்தும் முத்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    சொல்லிய கருத்துகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா. தம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்கள்தான் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்ற எண்ணமும் பரவலாக இருந்துவருவதால் நேர்மறை எண்ணங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எதிர்மறை எண்ணங்கள் ஊக்கம் பெற காரணமாக அமைந்துவிடுகின்றன.

    ReplyDelete
  7. அருமை ஐயா
    அனைத்தும் உண்மை
    அன்பைப் பொழிவோம்
    தம +1

    ReplyDelete
  8. முகநூல் முத்துகள் அனைத்தும் நன்று.

    அன்பினை பரப்புவோம்...

    ReplyDelete

  9. ஐயா வணக்கம்! நலமா

    தமிழ்மணம் 9

    தாயகப் பயணத்தில் தங்களை காணமுடியவில்லை என்ற வருத்தம் இன்னும் நெஞ்சுள் நிலைத்துள்ளது. அடுத்த முறை தங்களைச் சந்திப்பேன்.

    அன்பின் அமுதை அளிக்கும் உரைகண்டேன்!
    இன்னும் எழுதுக இங்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. உண்மையான-சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா!

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை!
    ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!

    உண்மைதான். தன்னைப்போல பிறரை நேசி. நீ பிறரிடம் எதை எதிர்ப்பார்க்கின்றாயோ... அதையே அவர்களுக்கு நீ செய்.
    நன்றி.
    த.ம. 11

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...