Wednesday, April 29, 2015

மனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே!


மனிதா மனிதா ஒடாதே
மதுவே கதியெனத் தேடாதே
இனிதாய் இருக்கும் தொடக்கத்தில்
இறுதி உயிரின் அடக்கத்தில்
நனிதாய் ஏதும் வேண்டாவே
நஞ்சாம் மதுவைத் தீண்டாவே
கனிதான் வாழ்கை அறிவாயே
கடமை அதுவெனப் புரிவாயே


குடியைக் கெடுப்பது குடியாகும்
குடும்ப அமைதிக்கு வெடியாகும்
விடியா இரவாய் வாழ்வாகும்
வேதனை நீங்கா சூழ்வாகும்
கொடிய குணங்களின் தாயாகும்
குற்றமே தீரா நோயாகும்
கடிவாய் உணர்ந்து இக்கணமே
காண்பாய் இன்பம் அக்கணமே

புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. வணக்கம்
    ஐயா
    நல்ல வழிப்புணர்வுக்கவிதை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. த.ம 2
    மனிதன் உழைக்கும் அரைவாசிப்பணம் அங்குதான் உள்ளது ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  2. குற்றமே தீரா நோயை
    கற்போர் உம் கவியை
    உற்றுணர்ந்தே தீண்டாது காண்!

    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. குடியைக் குறித்த கவிதை அருமை ஐயா
    தமிழ் மணம் காலையில் முதலாவது.

    ReplyDelete
  4. நல்ல அறிவுரைகளும் கவிதையும். அருமை !

    ReplyDelete
  5. தானே இந்த மன நோயிலிருந்து தப்பிக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
  6. நல்ல அறிவுரை. புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே!

    ReplyDelete
  7. குடி பழக்கத்தின் கொடுமையை எடுத்து சொல்லும் அழகு கவிதை.

    த ம 6

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...