Wednesday, July 1, 2015

தலைக்கனம் இல்லை என்றே –காவலர் தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!



தலைக்கனம் இல்லை என்றே –காவலர்
தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!
விலை,கனம் வாங்க வில்லை –என்ற
வேதனை அறியாத் தொல்லை!
இலை,கனம் பையில் ஆமே –பணம்
இல்லாத குறையும் தாமே!
நிலைக்கனும் சட்டம் என்றால் –கால
நீட்டிப்பே நியாயம் இன்றாம்!


நடுத்தர குடும்பத் தாரே –இன்று
நாதியில் ஊமை யாரே!
எடுத்திதைச் சொல்லக் கூட –சற்றும்
எண்ணிடார்! நாளும் ஓட!
தடுத்திடும் சட்டம் கண்டே- அவர்
தாங்கிடார்! துயரம் கொண்டே!
விடுத்தனன்! நானும் இந்த –அரசை
வேண்டினேன் வணக்கம் தந்தே!

புலவர் சா இராமாநுசம்

33 comments :

  1. நடுத்தர வர்க்கம் சார்பாக விடுக்கும் வேண்டுகோள்..
    சிந்திக்க வேண்டும் அரசு.

    ReplyDelete
  2. தலைக்கனம் இல்லை என்றே –காவலர்
    தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!

    ReplyDelete
  3. நடுத்தர குடும்பத் தாரே –இன்று
    நாதியில் ஊமை யாரே! //
    ஆம் நடுத்தரவர்க்கம்...
    தம 3

    ReplyDelete
  4. தலைக் கனம் இன்றி வாழ்வதுதானே நல்லது :)

    ReplyDelete
  5. தலைக்கவசம் என்பது தலைக்கனம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா!

    ReplyDelete
  6. மிக அருமையாக எளிய முறையில் கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  7. அரசு சிந்திக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
  8. கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் என்பது சரிதான் ஐயா!

    ReplyDelete
  9. இன்றைய சூழலுக்கு மிக பொருத்தமான கவிதை!
    தலைகனம் நல்ல சொல்லாடல்!
    த ம 9

    ReplyDelete
  10. தலைக்கவசம் மிக அவசியமே! எத்தனை கால நீட்டிப்புக் கொடுத்தாலும் சிலர் திருந்தப்போவதில்லை!

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா !

    சிந்திக்கத் தூண்டும் சிறப்புறும் கவிதந்தீர் அருமை ஐயா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  12. ““ நாதியில் ஊமையாரே ”

    என்ற வரிகைளை மிகவும் ரசித்தேன்.

    நன்றி ஐயா.!

    ReplyDelete
  13. மக்களின் நன்மைக்குச் சொன்னாலும் கெடுபிடி அதிகம்.

    ReplyDelete
  14. நாங்கள் எங்கள் பதிவில் நீட்டி முழக்கி சொன்னதை தெளிவாக அழகாக சொல்லி விட்டர்கள் ஐயா!

    ReplyDelete
  15. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  16. வணக்கம்!
    மனதை நெருடும் உண்மையை உணர வைத்த கவிதை வரிகள் !அரசும் இதனை உணர வேண்டும் .சிறப்பான சிந்தனை !வணங்குகின்றேன் ஐயா .

    ReplyDelete
  17. வணக்கம்
    ஐயா
    சிந்திக்கவைக்கும் கவித்துவம் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 17
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. தற்போதைக்கு தங்கள் பாணியில் கூறுவதென்றால் தலைக்கனம் (தலைக்கவசம்) தேவையே. நன்றி.

    ReplyDelete
  19. கட்டாய ஹெல்மெட்டால், நடுத்தர மக்கள் படும்பாட்டை கவிதையாகச் சொன்னீர்கள்.

    த.ம.20

    ReplyDelete
  20. கட்டாயம் அணியத் தான் வேண்டும். சில மாநிலங்களில் வாகனம் வாங்கும்போது கூடவே தலைக்கவசமும் வாங்கினால் தான் வாகனம் பதிவே செய்வார்கள்.....

    போதிய அவகாசம் கொடுத்தால் நல்லது!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...