Monday, July 6, 2015

எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான் எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை

எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான்
எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை-இன்று
தொழுகின்றேன் உறவுகளே உம்மை எல்லாம் –மேலும்
தொடர்வீரே! மறுமொழியாய் நாளும் பல்லாம்-ஏதும்
வழுவாக எச்செயலும் செய்தேன் இல்லை –நன்மை
வருமென்று மாற்றார்க்கும் தாரேன் தொல்லை-நொந்து
அழுவர்க்கும் உதவுகின்ற குணமும் கொண்டேன் –என்னை
அறிந்தார்கும் இதுதெரியும்! உண்மை! விண்டேன்!

எத்தனையோ கற்பனைகள் நெஞ்சில் எழுமே –முதுமை
எழுதிவிட தடைபோடும் உள்ளம் அழுமே-நானும்
புத்தனல்ல ஆசைகளை அடக்க இயலா –மனம்
போதிமரம் அல்லயிது! பொங்கும் புயலா?-நாளும்
சித்தமெனும் கடல்தன்னில் அடிக்கும் அலையா?-வானில்
சிறகடித்து பறக்கின்ற பறவை நிலையா?-அறியேனாக
(இவை)
அத்தனையும் தாண்டித்தான் எழுது கின்றேன் –உம்மோர்
அன்பாலே வலிமறந்து நாளும் வென்றேன்

புலவர் சா இராமாநுசம்

40 comments :

  1. வணக்கமும் மனப்பூர்வமான வாழ்த்துகளும் என்றென்றும்.

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  2. வாழ்த்துக்கள் அய்யா!
    இந்த வயதிலும் அசராமல் தொடர்ந்து கவிதைகள் இயற்றி, அதையும் 750 பதிவு என்ற மாபெரும் இலக்கை தொட்ட தாங்கள் மென் மேலும் பதிவுகள் இட்டு பல ஆயிரங்களை கடக்க இறைவனை வேண்டுகிறேன்.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  3. உங்கள் வயதுக்கு உள்ள ஆரோக்கியமும் ஆர்வமும் எனக்கு கிடைக்க உங்கள் வாழ்த்துகள் தேவை. என் மனப்பூர்வமான வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  4. புலவர் அய்யாவுக்கு வணக்கம்! வாழ்த்துக்கள்! தாங்கள் ஆயிரமாவது பதிவுதனை எழுதிடவும் வேண்டும்; ஆயிரம் பிறை கண்டவர் என்ற பெயரினைப் பெற்றவர் என்ற பெருமையையும் அடைந்திட வேண்டும்.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  5. ஐயா தங்களின் ஆர்வம் எங்களுக்கும் இருக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  6. தமிழ்நண்பர்கள்.கொம் தளம் தொட்டு
    புலவர்குரல் வலைப்பூ வரை - தங்களை
    தங்களை நானறிவேன் - எழுத்து
    எம்மை இளமை ஆக்கும்
    எழுநூற்று ஐம்பதையும் தாண்டி
    பல்லாயிரம் எழுதுங்கள் - பலகோடி
    எண்ணங்களைப் பகிருங்கள் - நாம்
    அடிக்கடி படிக்க வருவோம் - நாளும்
    தங்கள் பணி தொடர
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  7. 750 பதிவுகளை எழுதியதற்கு பாராட்டுக்கள் மேலும் பலநூறு கவிதைகளை எழுத நலமோடும் பலமொடும் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...! இருந்தாலும் தங்களை வாழ்த்தும் வயதும் அறிவும் எனக்கு போதாது. தங்கள் ஆசீர்வாதமே எமக்கு தேவை ஐயா நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  8. மிகவும் மகிழ்ச்சி... மேலும் பல படைப்புகள் தொடர வேண்டும் ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  9. Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  10. மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  11. வாழ்த்துகள் ஸார்.

    எங்கள் ஊக்கமும் அன்பான நட்பும் என்றும் உண்டாயினும், மருந்தை மறக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  12. வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  13. வணக்கம் ஐயா! 750 பதிவுகள் இட்டதற்கு வாழ்த்துக்கள்!
    விரைவில் ஆயிரமாவது பதிவை எட்ட விழைகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  14. Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  15. வாலிபரான உங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி!ஆயிரம் ,ரெண்டாயிரம் என்று படைக்கப்போகிறீர்கள்!இறை அருள் துணை நிற்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  16. Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  17. 1000ஆவது பதிவை நெருங்கும் தங்களுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள். தங்களின் மன உறுதியும், தொடர்ந்து எழுதும் மனப்பான்மையும், பல பொருள்களில் விவாதிக்கும் அறிவுத்திறனும் எங்களை வியக்கவைக்கின்றன. தொடருங்கள் ஐயா, நாங்கள் பின்வருகிறோம்.

    ReplyDelete
  18. நாட்டு நடப்பை, வாழ்வியல் யதார்த்தத்தை
    கவிக் கண் கொண்டு நோக்கி
    கவிதையாக்கி வலையில் வடிக்கும்
    தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
    வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் எழுதுகோல் எழுதிக் கொண்டே இருக்கட்டும்
    நன்றி
    தம 13

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  19. #உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்!#
    எங்கள் ஊக்கம் தொடரும் அய்யா :)

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete
  20. வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல கவிதை பாடுவீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. உணவோ , மருந்தோ என்னை வாழ வைக்கவில்லை! உறவுகளே! நீங்கள் தரும் ஊக்கமே , நான் வாழ்வதற்குக் காரணமாகும்! நன்றி!

      Delete

  21. "அத்தனையும் தாண்டித்தான் எழுது கின்றேன் –உம்மோர்
    அன்பாலே வலிமறந்து நாளும் வென்றேன்"

    புலவர் அய்யா அவர்களே!
    அத்தனையும் தாண்டித்தான் எழுதுகிறோம் -புலவர்
    நித்தம் தரும் கவிதையை தொழுதபடி!
    நோய் நொடி தீண்டாத உமது எழுத்தைப் போல
    உடலும், உள்ளமும் நலமுடன் நாளும் திகழ வேண்டுகிறோம்.
    த ம 15
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...