Saturday, October 3, 2015

நல்லோரே எண்ணுங்கள் நாட்டின் நடப்புதனைஉறவுகளே! வணக்கம்!
நேற்று முகநூலில் வந்த செய்தி! நீங்களும் படித்திருக்கலாம்! ஒட்டன் சத்திர விவசாயி(அவரும் பதிவர்தான்) தன், தோட்டத்தில் விளைந்த பீட்ருட் கிழங்கை கிலோ மூன்று ரூபாயிக்கே. விற்க வாங்கி ,அதனை வெளிச் சந்தையில்
கிலே முப்பதுக்குமேல் நாற்பது வரைவிற்று வர்த்தகர் இலாபம் அடைகிறார்கள்!
இக் கொள்ளைக்கு யார் கரணம்! உற்பத்தி செய்தவனுக்கோ , வாங்கும்
பொதுமக்களுக்கோ இதனால் பயனுண்டா? விவசாயிஎப்படி வாழமுடியும்! இதனைத் தட்டிக் கேட்கும் அரசோ , கட்சிகளோ இங்கு உண்டா! ஆனால் வருங்காலம்  இதனை உணர்த்தும்
                     இன்று  ஓட்டு  வாங்குவதை மட்டுமே  குறியாகக்  கொண்டு   அனைத்துக்  கட்சிகளும்  போராடுவதும், பதவி, அதிகாரம் பெற  யாரோடு  யார்  சேர்ந்தால்  பயன் பெறலாம் என்று  கணக்குப் போடுவதும்   தானே  நாட்டின்  நடப்பாக உள்ளது
                       பசிப்பிணி மருத்துவன்  என்று  பாரட்டப்  பட்ட  உழவன்  பட்டினியால்
சாவதும் நன்றா?குண்டூசிகூட விலை  வைத்துதான் உற்பத்தி சாலையை விட்டு விற்பனக்கு
வருகிறது! ஆனால் விவசாயி,அவன்  விலை பொருளுக்கு  வியாபரி தானே  விலை  வைக்கிறான்  என்றால் விவசாயி  வாழ்வனா! இந்நிலை  நீடித்தால் எதிர்காலம்  என்ன  ஆகும்
                      நல்லோரே சிந்தியுங்கள்!

            புலவர்  சா  இராமாநுசம்

          

14 comments :

 1. உண்மைதான் ஐயா இதனை மக்கள் உணருவதில்லையே...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. இடைத்தரகர்கள் மூலம் விற்பதால்தான் இந்த நஷ்டம்! நேரடியாக களத்தில் இறங்கினால் நாலு காசு பார்க்கலாம்! அதற்கு மற்றவர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்!

  ReplyDelete
 3. அய்யா, அருமையாக கூறியிருக்கிறீர்கள். அரசாங்கம் ஒரு காரணம் என்றால் இந்த நிலைக்கு விவசாயிகளும் மறு காரணமாக இருக்கிறார்கள். வசதியான விவசாயிகள் இந்த இடைத் தரகர்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். அகப்பட்டுக் கொள்பவர்கள் எல்லாம் ஏழை விவசாயிகள்தான். அவர்களும் தங்கள் விளை பொருளை சந்தைபடுத்தும் உத்தியை கையாண்டார்கள் என்றால் இதிலிருந்து விடுபடலாம். தனது விளைநிலத்திலே தரகரிடம் விற்பனை செய்வதை விடுத்து, பொருளை எடுத்துக் கொண்டு தேவை உள்ள இடத்தில் சந்தை படுத்தினால் மட்டுமே விவசாயிகள் லாபம் ஈட்டமுடியும்.

  ReplyDelete
 4. உழவர் சந்தை திட்டம் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்றார்களே !

  ReplyDelete
 5. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம்அறம்

  நன்றி

  ReplyDelete
 6. நாட்டு நடப்பினை நினைக்கும்போது வேதனையாகத் தான் உள்ளது ஐயா.

  ReplyDelete
 7. ஆதங்கப்பட மட்டுமே இயலும் என்ன செய்வது?

  ReplyDelete
 8. நாம் தான் மாறனும் ஐயா,,,,
  அருமையாக சொல்லியுள்ளீர்கள்,
  நன்றி.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...