Sunday, December 6, 2015

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
அழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் போல -அவன்
அல்லலுக்கு விடிவுண்டா என்றும் சால!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
பொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்
போனபின்னர் அவன்செயலை எடுத்துப் புகல!
விழுதுகளாம் பிள்ளைகளும் மனைவி என்றே –படும்
வேதனையை விளக்குவதும் எளிதும் அன்றே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!

நஞ்சுண்ட விவசாயி கண்டோம் இன்றே –வரும்
நாட்களிலே நடக்குமிது காணும் ஒன்றே!
பஞ்சுண்டு நெய்வதற்கும் ஆலை யுண்டே –ஆனா
பலநாளாய் மூடியது அரசின் தொண்டே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
கஞ்சுண்டு வாழ்வதற்கும் தொட்டி கட்ட –அரசு
கருணையுடன் மானியமே நம்முன் நீட்ட!
நெஞ்சுண்டு நன்றிமிக வாழ்வோம் நாமே –பெரும்
நிம்மதியாய் அஞ்சலின்றி நாளும் தாமே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
புலவர் சா இராமாநுசம்

9 comments :

 1. அருமை ஐயா இன்றைய வாழ்வின் அவல நிலை உண்மை
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆம் அய்யா..அப்படித்தான் ஒவ்வொன்றும் ஆகிப்போச்சு

  ReplyDelete
 3. தொண்டர்களை
  கடவுளின் பிள்ளைகளாக
  வணங்குகின்றேன்

  வானிலிருந்து - கடவுள்
  தன் திருவிளையாடலைக் காட்ட
  தரையிலிருந்து - மக்கள்
  துயருறும் நிலை தொடராமலிருக்க
  கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

  போதும் போதும் கடவுளே! - உன்
  திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

  கடவுளே! கண் திறந்து பாராயோ!
  http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

  ReplyDelete
 4. பழக பழக பாலும் புளிக்கும் ,அதுவே சரியா போகுமா :)

  ReplyDelete
 5. துயரத்தின் மடியில் துவண்டு போன உங்கள் துயரக் கவிதை. வேறு என்ன சொல்லி ஆற்றிக் கொள்வது? சென்னையில் இருக்கும் உங்களோடும் பிற பதிவர்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே பேச முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மதுமதி இரண்டு தினங்களுக்கு முன்னால் சொன்னார்)

  ReplyDelete
 6. எல்லா இடர்களும் பழகி விட்டால் சரியாய்ப் போகும் நம் பால்ய வயதில் எல்லா இடங்களிலும் மின்சாரம் இருந்ததா என்ன . அப்படி வளர்ந்தோர்தாமேநாம்

  ReplyDelete
 7. பழகிவிட்டால் எல்லாம் கைவந்துவிடும்.
  த ம திறக்க மறுக்கிறது.

  ReplyDelete
 8. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
  சில வேண்டுதல்கள்...

  இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
  மணிதம் இன்னும் மரிக்கவில்லை
  என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
  நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
  நிறையவே நாம் ஜாக்கிரதையாக
  செயல்பட வேண்டிய தருணம் இது...

  அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
  வேண்டுதல்கள்..

  1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

  2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

  3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

  4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

  உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

  நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

  உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...