Showing posts with label இன்றைய தேவை அவசியம் அவசரப் பணி. Show all posts
Showing posts with label இன்றைய தேவை அவசியம் அவசரப் பணி. Show all posts

Tuesday, December 15, 2015

திருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்!



நடந்தது நடந்தது போக- இனியே
நடப்பது நலமாய் ஆக
திடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்
தேவையை அறிந்து நடப்பீர்
கடமையாய் எண்ணிச் செயல்பட – சகல
கட்சிகள் இணைந்து புறப்பட
உடமைகள் இழந்த மக்கள் –துயர
உள்ளத்தின் புண்ணை ஆற்றும்


ஒருவரை ஒருவர் சாடி –மேலும்
உரைப்பதால் தீமைக் கோடி
வருவதால் உண்டா பலனே –அதனால்
வாராது மக்கள் நலனே
பெறுவது ஏதும் இல்லை-நாளும்
பெற்றது தீராத் தொல்லை
திருவினை இழந்தோர் போற்ற –வழிகள்
தேடியே புண்ணை ஆற்றும்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...