Friday, March 31, 2017

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!



ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!


புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. வோட்டை விற்க மட்டும் தெரியும்!

    ReplyDelete
  2. ஐயா, ஓட்டளிப்பவர் எல்லாரும் தங்கள் பதிவைப் படித்துவிட்டா ஓட்டுச் சாவடிக்குப் போவார்கள்? நாம் வேறு, அவர்கள் வேறு ஐயா! இருவேறு உலகத்து இயற்கை - என்று வள்ளுவர் எதற்கோ சொன்னது இதற்கும் பொருந்தும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  3. மக்கள் பணத்திற்கு அடிமையாக வீழ்ந்துவிட்டார்கள் ஐயா

    ReplyDelete
  4. அற்புதமான கவிதை
    இன்னும் தொடர்ந்திருக்கலாமோ எனத் தோன்றியது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. சவுக்கடி வார்த்தைகள் கவிதையாய் நன்று ஐயா
    த.ம.4

    ReplyDelete
  6. அருமை ஐயா...
    நாம ஓட்டை வித்துட்டு வருந்திக்கிட்டு இருக்கோம்...

    ReplyDelete
  7. என்று தீருமோ இந்த கொடுமை ?ஜனநாயகம் போய் பணநாயகம் ஆகிவிட்டது :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...