Tuesday, April 4, 2017

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!



எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்ல
இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நளும்
கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்மின்
இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
கயவரைக் கண்டாலே விலகலினிது!

புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. அருமை ஐயா மிகவும் ரசனைக்குறிய வரிகள்
    த.ம.1

    ReplyDelete
  2. ஆஹா, பொழுது விடிந்ததும் 'இனிய' கவிதை!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

  3. "பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
    பிழையின்றி பேசலே மொழிக்கினிது!" என்பதை
    எல்லோரும் பின்பற்றுவதே நலம்!

    ReplyDelete
  4. பதினாறும் இனிது :)

    ReplyDelete
  5. நான்சொல்ல வந்தைத பகவான் ஜி சொல்லிவிட்டார்

    ReplyDelete
  6. உங்கள் கவிதையும் இனிது....

    ReplyDelete
  7. உங்களின் கவிதையைப் படித்து அனுபவித்தல் அதனினும் இனிது ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...