Thursday, April 13, 2017

மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல் முறையின்றி வரவே வருந்துகிறேன்!

மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல்
       முறையின்றி வரவே  வருந்துகிறேன்
வேண்டி  கவிதை முன்பேநான்-கூறி
       விண்ணப்பம் செய்திட கண்டேதான்
திருந்திய  நிலையில்  வந்ததுவே-தூயத்
        தேனென  இனிமை  தந்ததுவே
வருந்தவே  ஆனது  பழைபடி-மீண்டும்
         வருமா பார்போம்  முறைப்படி!

புலவர்    இராமாநுசம்

9 comments :

  1. தமிழ் மணம் எந்த தரவரிசை தந்தால் என்ன புலவரே. தமிழ் வலைப்பதிவர் மனங்களில் தாங்கள் என்றும் சிறப்பிடம் பெற்றல்லவா திகழ்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் கருத்தை வழி மொழிகிறேன் ஐயா

      Delete
    2. அய்யா அவர்கள் தர வரிசைப் பற்றிச் சொல்லவில்லை ,நம் பதிவுகளின் பட்டியல் சரியாக முகப்பில் தோன்றுவதில்லை என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் !

      அய்யா ,உங்களுடைய முந்தைய விண்ணப்பத்தின் போதே ,தமிழ்மணம் சரியாகவில்லை என்று என் கருத்தினைக் கூறியிருந்தேன் ,அதுவே இன்னும் தொடர்கிறது :)

      Delete
  2. அதென்ன தமிழ்மணப் பட்டியல்? புரியவில்லை.

    ReplyDelete
  3. தமிழ் மணம் செயல் இழந்து போய்விட்டது ஐயா

    ReplyDelete
  4. தமிழ் மணம் - என்று
    பதிவர் மனம் அறியும்

    ReplyDelete
  5. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு.....

    நாம் இணைக்கும் பதிவு, தமிழ்மணம் 1-இல் [1,2,3,4,5,6,7,next] வெளியாகும். ஆனால், இது முகப்புப் பக்க இடுகைப் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. காரணம், முகப்பில் இடம்பெற்ற பட்டியல் நீண்ட நேரம்[பல மணி நேரங்கள்கூட] நகராமல் இருப்பதுதான்.

    தமிழ்மணத்தைக் கிளிக் செய்து நாம் இணைத்த இடுகையை முகப்புப் பக்கத்தில் காண முடியாது[விதிவிலக்காகச் சில நேரங்களில் முகப்புப் பட்டியலிலேயே அது இடம்பெற்றுவிடுவதுண்டு].

    ஆனாலும், பக்கம் 1 இடுகைப் பட்டியலில் இடம் பிடித்த நம் இடுகை நகர்ந்து 2-ஆம் பக்கத்துக்குச் செல்லும்.

    முகப்புப் பக்கப் பட்டியல் மணிக் கணக்கில் நகராமல் நின்றுவிடும் நிலையில், நம் இடுகை 1, 2, 3 என அடுத்தடுத்த பக்கங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கும். முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு அதற்குப் பறிபோகும்.

    போனால் என்ன என்கிறீர்களா? தமிழ்மணம் வாசகரில் மிகப் பெரும்பாலோர், முகப்புப் பக்கப் பட்டியலில் உள்ள இடுகைகளை வாசிப்பதோடு நின்றுவிடுகிறார்கள். விளைவு...

    நம் இடுகைக்கு மிகவும் குறைவான ‘பார்வை’களே கிடைக்கும்.

    சில நிமிடங்களில் நம் இடுகை முகப்பில் இடம்பெறவில்லையென்றால்.....

    எண் 2-ஐக் கிளிக் செய்து பட்டியலைப் பார்த்துவிட்டு, எண் 1-ஐக் கிளிக் செய்தால் அதில் நம் இடுகை இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

    முகப்புப் பக்கத்தில் உள்ள சூடான இடுகைகள் பட்டியலும்கூட பல நேரங்களில் ஸ்தம்பித்து நகராமல் இருப்பதும் நாம் அறியத்தக்கதே.

    இக்குளறுபடிக்கு, தமிழ்மணம் தானியங்கி இயந்திரத்தில் உள்ள பழுதே காரணம் எனலாம்.

    இப்பழுது சரிசெய்யப்பட வேண்டும் என்று நான் உட்பட பதிவர்கள் பலரும் கோரிக்கை வைத்தோம். தமிழ்மணம் ஏனோ கண்டுகொள்ளவில்லை.

    என்னுடையை சில இடுகைகளை இரண்டு முறை[எப்போதாவது மூன்று முறை] தமிழ்மணத்தில் இணைப்பது, முகப்புப்பக்கத்தில் அவற்றை இணைப்பதற்கான முயற்சிதான். அதுவும் சில நேரங்களில் தோல்வியைத் தழுவுகிறது.

    ReplyDelete
  6. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு.....

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...