Thursday, May 11, 2017

என் முகநூலில் வந்தவை




அரிசியிலே கல்லிருந்த பொறுக்கி எடுத்துட்டு சமைக்கலாம் கல்லுலே அரிசியிருந்தா !!? முடியுமா
இப்படிதான் நம்முடைய வாழ்க்கையிலே சில நிகழ்வுகள் அமைந்து விடுகிறது

தமிழக விவசாயிகள் இறப்பை மறைத்து, வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலை பிரமாண பத்திரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.! வெட்க க் கேடானது !

உறவுகளே!
ஆட்சி, அதிகாரம் ,பதவி என்று வந்தாலே ,எந்த கட்சி ஆனாலும் ,ஊழல் செய்யவே தொடங்கி விடுகின்றன! இதில் எந்த மாறுபாடுமில்லை! அவ்வகையில் , தமிழகத்தில் ஊழல் செய்யாத கட்சியே இல்லை என்பதுதான் உண்மை! இந் நிலைக்கு காரணம், மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதும் அரசியல் வாதிகளின் பண,பதவி பேராசையும் போன்ற இன்னும் பலவம் ஆகும்

உறவுகளே!
தமிழகத்தின் இன்றைய முக்கிய தேவையாக இருப்பது
குடிநீர் பிரச்சனையே! பிளவு பட்ட அண்ணா தி மு க இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்போ இல்லை! சேர்ந்தாலும் நீடிக்காது! எனவே மத்திய அரசு, உடன்
தமிழக சட்ட மன்றத்தை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து, ஆளுனர் ஆட்சியை கொண்டு வந்து போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை
தீர்ப்பதே நன்று மட்டுமல்ல! இன்றியமையாத் தேவையும் ஆகும்!

ஆபத்து வருமுன்னர் அதனைத்
தடுத்து நிறுத்தாவர் வாழ்க்கையானது எரியும் தீயின்
முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல் எரிந்து
அழிந்து விடும் என்பதைவள்ளுவர் வருமுன்னர் காவாதான் வழ்க்கை என்று கூறுவார்!அதுபோல வரும் எதிர்காலத்தில் பெரும் குடிதீர் பஞ்சம் வரப்போகிறது! அதனை சமாளிக்க இன்றைய அரசின் நிலை இல்லை எனபதை அனைவரும் அறிவோம்! ஆகவேதான் முன்எழுதிய பதிவில்
ஆளுனர் ஆட்சி ஆறுமாதமாவது தேவை எனக் குறிப்பிட்டேன்! மற்றபடி நான் சனநாயகத்திற்கு
எதிரானவனல்ல!


உறவுகளே!
சோப்பு விக்கிறவன் கை அழுக்கா இருந்தாலும் பராவாயில்லை! சோப்பு அழுக்கைப் போக்குகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்!-அறிஞர் அண்ணா


புலவர்  சா இராமாநுசம்

 

7 comments :

  1. உண்மையான கருத்து ஐயா.

    ReplyDelete
  2. பயன்தரும் நல்லெண்ணங்கள்

    ReplyDelete
  3. அறிஞர் அண்ணா சொன்னதுக்கு பதிலும் கிடைத்ததே ....தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்று :)

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    யாவரும் உணரும் படியான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு ஐயா. இங்கேயும் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம்.

    ReplyDelete
  6. முகநூலில் நீங்கள் வருவதே எனக்குத் தெரியாது ஐயா! அறிஞர் அண்ணாவின் இன்னொரு வசனமும் நினைவுக்கு வருகிறது- (பகவான் ஜி க்கும்?)- 'அவள் படிதாண்டா பத்தினியுமல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல'. எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்று நினைவில் இல்லை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...