Sunday, May 7, 2017

கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு !



கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்
கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு
முதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்
முழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை
கதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று
கைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்
விதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்
வேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்


புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. சூழ்நிலைக் கவிதை அருமை ஐயா
    கதிரவன் ஏற்பான் என்றே நம்புவோம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    கவிதை சிறப்பு இறைவன் கருணை கிடைக்கட்டும்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆமாம்ப்பா. முடில... கத்திரி வேற

    ReplyDelete
  4. கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு....

    அனைவருடைய வேண்டுகோளும் அதுவாகத்தான் இருக்கிறது! கோடை கொடுமையாகத் தான் இருக்கிறது!

    ReplyDelete
  5. உங்கள் குரல் காதில் கேட்டதோ என்னவோ. தமிழ் நாட்டில் பல இடங்களில் மழை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...