Tuesday, June 6, 2017

மழையே மழையே வாராயோ- வாடும் மக்கள் துயர்தனைப் பாராயோ!



மழையே மழையே வாராயோ- வாடும்
மக்கள் துயர்தனைப் பாராயோ
பிழைதான் செய்தோம்! பொறுப்பாயே-உனது
பிள்ளைகள் தம்மை வெறுப்பாயோ
உழுவார் தொழிலே முடங்கிவிட-பற்றா
உணவுப் பஞ்சம் அடங்கிவிட
தொழுவோம் உன்னைப் பாராட்டி-மற்ற
தொழிலும் வளர்ந்திட சீராட்டி


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. எத்தனை மரங்கள் அழித்தான் மனிதன் அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை நீரோடும் வழிகளில் அடைத்தான்
    இனியாவது மனிதன் தன்னை திருத்திக்கொள்ள ஒருமுறை வந்து தலையில் கொட்டட்டும்
    அருமை ஐயா

    ReplyDelete
  2. நம்புவோம் ஐயா...

    ReplyDelete
  3. இன்று எங்கள் ஏரியாவில் மழை வருவது போல இருட்டி, ஆனால் வராமல் ஏமாற்றி விட்டது!

    ReplyDelete
  4. இயற்கை அன்னை கருணை மழையை கொட்ட ஆரம்பித்து விட்டாள் :)

    ReplyDelete
  5. இன்று தஞ்சையில் எங்கள் பகுதியில் நல்ல மழை ஐயா
    மகிழ்ந்தேன்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    காலம் உணர்ந்து கவி பாடியது தனிச்சிறப்பு நல்லதே நடக்கட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. உண்மைதான்
    மழை இல்லாவிட்டால் வேறு எந்தத் தொழிலும் நடக்க இயலாது ...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...