Friday, August 18, 2017

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!



எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

26 comments :

  1. முதலாம் வாக்கை இட்டு படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  2. ரசித்தேன் ஐயா
    த.ம.பிறகு.

    ReplyDelete
  3. இதே அனுபவம் எனக்கும் இருந்தது கூனூரில் நாங்கள் குடியிருந்த பேரிக்காய்த் தோப்பு காணவே காணம் எங்கு போயிற்று என்று சொல்ல யாரும் இல்லை

    ReplyDelete
  4. ரசித்தோம் ஐயா! வாக்கு 2

    ReplyDelete
  5. உங்கள் ஊர் மட்டுமல்ல ஐயா. அனைவருடைய ஊர்களும் மாறிவிட்டன.

    ReplyDelete
  6. பசேல் என்ற தோட்டநிலங்கள் மாடி வீடுகள் ஆகிவிட்டது.
    பச்சைகூடாரங்களில்பயிர்செய்கை.அதற்கும் இழுக்கு வராமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. எல்லோருக்கும் உண்டான ஆதங்கம் அய்யா. நத்தம், புறம்போக்கு, வாரி என்று அழைக்கப்பட்ட நிலங்கள் யாவும் என்னவாயின?

    ReplyDelete
  8. சின்ன வயதில் நான் கண்ட தெருவே மாறி விட்டது ,ஊர் என்றால் ஏமாற்றமே மிஞ்சும் ,பழைய கோலமே பசுமையாய் நிற்கும் :)

    ReplyDelete
  9. எல்லா ஊரும் மாறிட்டுதுப்பா

    ReplyDelete
  10. ஊரெல்லாம் மாறிக்கொண்டே வருகின்றது ஐயா
    காரணம் வளர்ச்சியாம்
    இயற்கையை அழித்து ,வளர்ச்சி காணும் உலகம் அல்லவா இது
    தம+1

    ReplyDelete
  11. மாற்றம் - ஒன்று மட்டுமே மாறாமல்....

    த.ம. பத்தாம் வாக்கு.

    ReplyDelete
  12. லாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன்------ வளர்ச்சி என்ற காலத்தின் கொடுமை

    ReplyDelete
  13. ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன்---காலத்தின் கொடுமை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...