Wednesday, September 6, 2017

முகநூல் பதிவுகள்!



உறவுகளே
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயஆட்சி என்ற கோரிக்கையை குறிக்கோளாக்ஃ கொண்டு கட்சி வேறுபாடு இன்றி மக்கள் அனைவருமே ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றால் தான்,இன்றைய
அரசியல் அவலங்களைப் போக்க முடியும்! செய்வார்களா!

இந்த செயலை இந்த வகையில்
இவன் செய்து முடிப்பான் என்று ஆய்வு
செய்து அந்த செயலை அவன் செய்ய விடுதல்
நன்று என்பதே வள்ளுவர் வாக்கு! மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்வோர் அறிந்து நடந்தால் சரி


மத்திய அமைச்சரவை விரிவாக்கப் பட்டு பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமனுக்கு அளிக்கப்பட்டுள்ளது! மிகவும் முக்கியமானது
பாதுகாப்புத் துறை, அது அதில் சற்றும் அனுபவம்
இல்லாதவரிடம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும்
கவலைக்குரியது ஏதோ பங்கு பிரிப்பதைப் போல
எதையும் எண்ணாமல் அமச்சரவை விரிவாக்கம்
நடந்துள்ளதே தவிர நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை


நீட் தேர்வில் விலக்குப்பெற ஆந்திர மாநிலமே நமக்கு முன்மாதிரி. அரசியலமைப்புச் சட்டத்திலேயே 32 வது திருத்தமான amendment of 371 D in 1974 அரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது என உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசும் பெற முயற்சித்திருக்கவேண்டாமா!?? எப்படி செய்வார்கள்! இங்கே ஆளும்
அமைச்சர்களுக்கு , தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதுதானே
முழுநேர வேலை! எத்தனை அனிதாக்கள் பலியானாலும் அவர்கள்
கவலைப்பட மாட்டார்கள்! மக்கள் எழுச்சி பெறாதவரை இதுதான்
நடக்கும்!
 
 


புலவர்   சா  இராமாநுசம்

11 comments :

  1. தொலைநோக்கு இல்லாத அரசியல்வாதிகள். தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. சுயநல அரசியல்வாதிகள் இருக்கும் வரை மக்களுக்கு நன்மை நடக்குமென்று எதிர்பார்க்கமுடியாது ஐயா! காத்திருப்போம் நல்லது நடக்குமென்று.

    ReplyDelete
  3. முடிவில் சொன்னதே உண்மை ஐயா

    ReplyDelete
  4. #ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது #
    முக்கியமான கருத்து அய்யா ,இங்குள்ள அரசு இந்த விஷயத்தில் இன்னும் ஏன் தூங்குகிறது ?

    ReplyDelete
  5. வோட் பண்ணி விட்டு மவுனமாகப் போகிறேன்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா !

    காமராசரையே கவுத்துவிட்ட கூட்டம் இது
    எதைச் சொல்லியும் திருந்தாது அதனால் ...அதிரா சொன்னதுபோல் மோனம் சிறந்தது .....

    தம +1

    ReplyDelete
  7. தம்மைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளின் முன் எதுவும் எடுபடாது ஐயா.

    ReplyDelete
  8. வேதனையான காலம் ஐயா இது
    தம +1

    ReplyDelete
  9. அரசியல் ஆதாயம் மட்டுமே பார்க்கும் காலம் இது... என்ன சொல்வது!

    ReplyDelete
  10. டெட்பாடிகளை புதைத்தால் மட்டுமே வழி பிறக்கும்.

    ReplyDelete
  11. //எத்தனை அனிதாக்கள் பலியானாலும் அவர்கள்
    கவலைப்பட மாட்டார்கள்! மக்கள் எழுச்சி பெறாதவரை இதுதான்
    நடக்கும்! //உண்மை உண்மை

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...