Sunday, July 10, 2011

படமும் பாடலும் - 2

அன்னை முகமெங்கே அவள்கரமா நீதூங்க
சின்ன மலரேயென் செந்தமிழே நானேங்க
உன்னை நான்பாட உவகை எனைநாட
பொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ
கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
மின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய்
என்னை மறந்தேநான் எழுதிடுவேன் எழுவாயா
இன்னல் தரமாட்டாய் ஏனென்றால் நீகுழந்தை

புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. //கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
    மின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய் ///
    அருமை

    நல்ல கவிதை நன்றி ஐயா

    ReplyDelete
  2. குழந்தைகள் இனிமையான இன்னல் தருவார்கள்!
    நல்ல கவிதை!

    ReplyDelete
  3. ///உன்னை நான்பாட உவகை எனைநாட
    பொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ ///
    அருமையான வார்த்தைகளை கொண்டு கோர்க்கப் பட்ட கவிதைச் சரம் அமர்க்களம் ஐயா

    ReplyDelete
  4. ரியாஸ் அஹமது said...

    காணவில்லையே எனக் கவலைப் பட்டேன்
    நன்றி தம்பீ

    இராமாநுசம்

    ReplyDelete
  5. சென்னை பித்தன் said...

    தவறாமல் வந்து கருத்துரை வழங்கும்
    உங்களை வணங்கி மகிழ்கிறேன்

    இராமாநுசம்

    ReplyDelete
  6. A.R.ராஜகோபாலன் said...

    உறுதியாக உங்கள் கருத்துரை வரும் என்பதை
    நான் அறிவேன் சகோ
    நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  7. படமும் பாடலும் அருமை ஐயா.

    ReplyDelete
  8. இராஜராஜேஸ்வரி said...

    நன்றி சகோதரி நன்றி

    இராமாநுசம்

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா, மரபில் தாலாட்டொன்றினைத் தந்து, நீங்கள் எழுதையில் குழந்தை எழுந்து இன்னல் தராதிருக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துப் படமும் பாடலும் பகுதியினைச் சிறப்பித்திருக்கிறீங்க. அருமை ஐயா.

    ReplyDelete
  10. நிரூபன் said...

    அலைச்சல் அதிகம் சகோ
    எந்த வலைக்குப் உங்க பின்னுட்டம் தான்
    நாலு, ஐந்து எண்ணிக்கையிலே முன்னுட்டமா
    இருக்கு
    பதிவும் போடறீங்க பதிலும் போடறீங்க
    எப்படி முடியுது சகோ

    இராமாநுசம்

    ReplyDelete
  11. இன்னல் தரா குழந்தைகள்.... நல்ல கவிதை ஐயா.

    ReplyDelete
  12. தமிழ்வாசி - Prakash said

    முதல் வருகை தந்த முத்தமிழ்வாசிக்கு
    வணக்கம், நன்றி

    இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...