Saturday, July 23, 2011

கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
          அதன் விளைவே, நினைவே இக் கவிதை

பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்
செழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதே கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மறவீர் மறவீர் நீரே வெல்வீர்

புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. அன்புடன் வணக்கம் ஐயா,

    //அன்றுத் தொடங்கி இன்று வரையில்
    கொன்று அழிப்பதே கொள்கை யாக //

    இவர்களை அழிக்க ஒருவன் வராமலா போய்விடுவான்
    காலம் பதில் சொல்லும் ...

    பகிர்வுக்கு + மனக் குமுறலுக்கு
    ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்கு

    நன்றி.

    ReplyDelete
  2. பிறந்த நாடும் பிரிந்த உறவும
    மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
    மறவீர் மறவீர் நீரே வெல்வீர் ..வெல்வீர்...

    ReplyDelete
  3. மறக்க முடியுமா !! கொல்லப்பட்ட மக்கள் ஐந்தாயிரத்துக்கும் மேல் ...

    ReplyDelete
  4. ஐயாவுக்கு வணக்கம் இந்த கலவரத்திலும் இதற்குமுன் இவர்கள் செய்த கலவரத்திலும் எனது குடும்ப அங்கத்தவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்..

     இந்த கலவரங்களைப்பற்றி முழுமையாக அறிய முடியாத எனது சிறுவயதி அகதியாக வந்தவர்களால் எனது கிராமமே நிறைந்திருந்தது அக்காலத்தில் ... 

    இபோது இருனூறுபேர்கள் கூட இல்லை எனது கிராமத்தில் 1983இல் எனது கிராமத்தின்  சனத்தொகை 25000 பேர்.. இப்போது எனது சகோதரனை பார்க்க வேண்டுமென்றால் 6500 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது...

    அகதிக ளாக ஈழரின் இரத்தம் 
    சகதிக ளாக வாழ்வதா நித்தம் 
    ஓடினார் ஓடினார் உலகு எங்கும் 
    தேடினார் பிழைக்க வழிதனை அங்கும் 
    பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும் 
    நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா 
    பிறந்த நாடும் பிரிந்த உறவும 
    மறந்து போகும் ஒன்றா சொல்வீர் 
    மறவீர் மறவீர் நீரே வெல்வீர்  

    வரிகள் மனசை குடையுதையா..

    ReplyDelete
  5. நெஞ்சை கனமாக்கும் கவிதை வரிகள்
    பல நினைவுகளை மீண்டும் யாபகப்படுத்துகின்றது ஐயா

    ReplyDelete
  6. //மறவீர் மறவீர் நீரே வெல்வீர் //
    நிச்சயம்!உங்கள் எண்ணங்கள் ஈடேறும்!

    ReplyDelete
  7. \\மறவீர் மறவீர்,,, நீரே வெல்வீர்,//

    வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். அரக்க சாம்ராஜ்ஜியம் இறுதியில் அழிந்து போகும் என்பது தான் இவ்வுலகம் இது வரை கண்ட வரலாறு .

    -இனத்தின் வலிகள்
    சொல்லும்
    கனத்த வரிகள்.

    அருமை அய்யா

    ReplyDelete
  8. உங்கள் கவிதை,,,இன்று என் நண்பன் லூயிஸை நினைக்க வைத்தது...1983 இல் என்னை நாடி வந்தது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது....உங்களதுபோல் இல்லாவிடினும் எனது 1983 கவிதை இங்கே...

    http://reverienreality.blogspot.com/2011/06/1983.html

    நன்றி நினைவுகளுக்கும்...நல்ல கவிதைக்கும் ஐயா..

    Reverie

    ReplyDelete
  9. கறுப்பு யூலையில் தேர்தல் வேண்டுமென்றே வைத்தார்கள்.தமிழினம் தமக்கென்றொரு உரிமை தேவை என்பதை மீண்டும் உலகிற்குக் காட்டியிருக்கிறது ஐயா.எனவே காத்திருப்போம் ஆடிக்கறுப்பு ஆடிக்களையும் !

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா, சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

    எங்களின் கடந்த கால அவல வாழ்வினையும், அவ் வாழ்வினூடாக என்றோ ஓர் நாள் எமக்கு நம்பிக்கை ஒளி பிறக்கும் என்பதையும் உங்கள் கவிதை இயம்பி நிற்கிறது.

    ReplyDelete
  11. //அகதிக ளாக ஈழரின் இரத்தம்
    சகதிக ளாக வாழ்வதா நித்தம் //
    //மறவீர் மறவீர் நீரே வெல்வீர் //

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

    ReplyDelete
  12. மாய உலகம் said...

    நண்பரே வணக்கம்
    தங்கள் வலை இரண்டு (எக்ஸ்ப்ளோர்,பயர்)
    தளங்களிலும் வருகின்றன. ஆனால் தட்டினால் தடைபட்டு அசையாமல் நின்று விடுகிறது

    உடன் கவனித்து ஆவன செய்ய வேண்டுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. நாங்கள் இழந்தது சுதந்திரம் மட்டுமல்ல. வீடு என்கிற சிறிய உலகம், ஓடி விளையாடிய தெருவும் நட்பும், செல்லப்பகையும், கூப்பிடாமலே ஓடிவரும் அயலும்..... இப்படி எத்தனையோ.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...