Tuesday, August 2, 2011

ஆழிப் பேரலை

ஜப்பானை சுனாமி தாக்கிய போது எழுதியது

அப்பா அப்பா அப்பப்பா-ஜப்பான்
அழிந்த நிலையைப் பாரப்பா
தப்பா தப்பா தப்பப்பா-கடலை
தாயென அழைத்தது யாரப்பா
உப்பா உப்பா உப்பப்பா-ஆனால
உணவே உப்பா கூறப்பா
இப்பா இப்பா இப்பாவப்பா-என்
இதய வேதனை உணர்வப்பா

சொல்லில் அடங்கா காட்சியப்பா-எனில்
சொல்ல வேணுமா சாட்சியப்பா
வில்லில் விடுபடும் அம்பைவிட-இதன்
வேகம் ஆயிரம் மடங்குபட
கொல்லும் கொலைவெறி கூச்சலிட-காணில்
கூற்றனும் கூட‍ அச்சபட
புல்லும பூண்டும மிஞ்சவில்லை-அங்கே
போயின அனைத்தும ஏதுஎல்லை

குப்பைஅள்ளி கொட்டினபோல்-எங்கும்
குவிந்தது மனித உடலங்கே
தப்பை செய்தாய் தாயாநீ-எவரும்
தடுக்க இயலா பேயாநீ
செப்ப உவமை உனக்குண்டா-இனியும்
செப்பிடத் தாயென வழிவுண்டா
எப்போ எழவாய் வருவாயோ-என
ஏங்கும் நிலைதான தருவாயோ

அணுவின் உலையும் போயிற்றே-ஊர்
அனைத்தும இருளாய் ஆயிற்றே
கணுவில் துளிரும கருகிவிட-எங்கும
காணும் காட்சிகள கண்ணீரவிட
இனியும எதற்கு அழித்துவிடு-இவ்
உலகை உன்னுள் ஆழ்த்துவிடு
கனிவுடன் உன்னை வேண்டுகிறேன்-மனம்
கனிந்து உடனிதை செய்வாயா---

புலவர் சா இராமாநுசம்

19 comments :

 1. அருமையான பாடல் ஒன்றை இயற்றியுள்ளீர்கள் ஐயா ........கடவுள் கருணை கொள்வாராக .....

  ReplyDelete
 2. //குப்பைஅள்ளி கொட்டினபோல்-எங்கும்
  குவிந்தது மனித உடலங்கே
  தப்பை செய்தாய் தாயாநீ-எவரும்
  தடுக்க இயலா பேயாநீ //

  ஆஹா! முத்திரை வரிகள், ஐயா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கண்ணீர் வருவதை தடுக்கமுடியலை....
  வரிகளில் வரும் சோகம் தாக்குகிறது ஐயா....


  தாயென இனி யார் சொல்வார்....இப்படி ஊழித்தாண்டவம் ஆடி அழித்ததே எல்லோரையும்....

  சிறப்பான வரிகள் ஐயா... அன்பு வாழ்த்துகள்....

  ReplyDelete
 4. புல்லும பூண்டும மிஞ்சவில்லை-அங்கே
  போயின அனைத்தும ஏதுஎல்லை

  அருமையான வரிகள் ஐயா...வாழ்த்துகள்....

  ReplyDelete
 5. இன்பமோ துன்பமோ இயல்பாக வார்த்தைகளுக்குள் உணர்வைக் கொட்டி வைக்கிறீர்கள் ஐயா !

  ReplyDelete
 6. மிக அருமை. கடைசி வரிகள் கோபப்பட்ட தாயிடம் விரக்தியின் உச்சத்தில் மகன் கேட்கும் வரம் போல...

  ReplyDelete
 7. //இனியும எதற்கு அழித்துவிடு-இவ்
  உலகை உன்னுள் ஆழ்த்துவிடு //

  கவிதையில் விரக்தியின் எல்லை தெரிகிறது... அதுவும் சரி பட்ட எடத்திலும் படும் என்பார்கள்..கொட்டிய இடத்திலேயே கொட்டும் என்பார்கள்... ஏற்கனவே குண்டால அழிந்தது...இப்போ சுனாமியால் தாக்குகிறது.. ஒரு பக்கம் அழிந்து ஒரு பக்கம் வாழ்வதற்கு நீங்கள் சொன்னது போல் ஒட்டு மொத்தமாக வாரிக்கொள் இறைவா.. உன்னுடனே வந்து நாங்களும் நிம்மதியாக இருக்கிறோம்...

  ReplyDelete
 8. "கணுவில் துளிரும கருகிவிட-எங்கும
  காணும் காட்சிகள கண்ணீரவிட
  இனியும எதற்கு அழித்துவிடு-இவ்
  உலகை உன்னுள் ஆழ்த்துவிடு
  கனிவுடன் உன்னை வேண்டுகிறேன்-மனம்
  கனிந்து உடனிதை செய்வாயா---"

  உண்மை தான் தினம் செத்து செத்து வாழ்வதை விட ஒரேதிரியாக செத்துப் போவதே மேல்.
  "வேதனையில் துடிக்கும் கன்றின் கழுத்தை நெரித்து கொன்றுவிடுங்கள்" மகாத்மா...
  அந்த உணர்வைக் காண்கிறேன் உங்களிடம் புலவரே!

  நன்றி.

  ReplyDelete
 9. அருமையான வரிகள் நன்றி ஐயா.

  ReplyDelete
 10. ''...இப்பாவப்பா-என்
  இதய வேதனை உணர்வப்பா''...
  எல்லோருக்கும் பலருக்கு இதே உணர்வு தானய்யா...சோகம் தான்...
  Vetha.Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 11. காட்சிகளை கண் முன் நிறுத்தும் கவிதைங்க.

  ReplyDelete
 12. இயற்றிய பாடல் வரிகளில்
  ஒரு நாட்டில் தடம் புரண்ட இயற்கை நிகழ்வு

  பாடலில் அழிவின் சோகம்
  அது இறைவனின் இயற்கை நியதி

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா,
  சிறுகச் சிறுகக் கொல்வதை விட, ஒட்டு மொத்த மக்களையும் அழித்தால் உனக்குச் சந்தோசமா என இயற்கையிடம் கோபக் கனலை வெளிப்படுத்தும் விதமாக உங்களின் கவிதை அமைந்திருக்கிறது.

  ReplyDelete
 14. ஆழிப் பேரலை: நினைவுகளை மீட்டிப் பார்த்து, இனியும் வாழ்தல் தகுமா என அனைத்து மனித உள்ளங்களையும் கேள்வி கேட்க வைக்கும் ஒரு கவிதை.

  ReplyDelete
 15. ஆழிப்பேரலையில் கூட கவிதை...

  நாம் மறக்கமுடியாத நினைவுகளை நினைவுக்குகொண்டுவருகிறது தங்கள் கவிதை...

  ReplyDelete
 16. சற்றே மறந்திருந்த சோகம் மீண்டும் மனம் கவ்வியது. ஆழமான வரிகள்.

  ReplyDelete
 17. இயற்கையை வெல்ல யாருண்டு. இதயம் கனக்கும் நிலை கண்டு ஏங்கம் தீர்க்க வாராது. நடந்ததை எண்ணி வருந்துவதே மனிதன் விதியென மனம் கொள்வோம். வாழ்த்துகள்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...