Sunday, August 7, 2011

விரட்டி இருக்க வேண்டாமா

மும்பையில் நடந்த மட்டைப்  பந்து விளையாட்டை வந்து  பக்சே  பார்த்து விட்டு திரும்பிய போது எழுதிய கவிதை            மட்டைப்  பந்து  ஆட்டத்தை-மும்பை
                 மண்ணில் காணும் நாட்டத்தில்
            திட்ட மிட்டே வந்தானா-பகசே
                 திடீர் வரவு தந்தானா
            சட்டைக் கிழிய அடிக்காமல்-நல்
                  சவுக்கால் உடலை சொடுக்காமல்
            விட்டதே போதும்  என்றோட-அவனை
                  விரட்டி இருக்க வேண்டாமா

           மண்ணின் மைந்தரே  மராட்டியரே-சிவாஜி
                 மரபில்  வந்த  தீரர்களே
           எண்ணிப் பாரும் வந்ததெவன்-நெஞ்சில்
                  இரக்க மில்லா அரக்கனவன்
           புண்ணைக் கிளறி இரணமாக்கி-வந்து
                   போனான் பக்சே புறம்போக்கி
           கண்ணில் இனிமேல் நீர்கண்டால்-முகத்தில
                  காறித்  துப்ப  மறவாதீர்

           ஏகம் இந்தியா எனப்பேசி-இனியும்
                  இருப்பது கற்பனை மனங்கூசி
            வேகம் காட்ட முனைவோமா-அதுவே
                  விவேகம் என்றதைக் கொள்வோமா
            தாகம் தணிக்க தண்ணீரும-சிங்களர்
                  தந்தால் உண்டாம் கண்ணீரும
            சோகம் காட்டும வார்ப்படமாய்-ஈழ
                  சோதரர் வாழ்வது திரைப்படமா

            ஒன்றா இரண்டா உரைப்பதற்கே-தமிழ்
                  உணர்வே இன்றெனில நாமெதற்கே
            நன்றா இதுதான் தமிழ்நாடே-இப்டி
                  நடந்தால் உனக்கது பெருங்கேடே
            குன்றாய் உறுதி நீகொண்டே-ஈழம்
                  கொடுத்திட ஏற்ற  வழிகண்டே
            நின்றால் துணையாய் தரும்வெற்றி-உலகில்
                  நிலத்து  நிற்கும்  நம்பெற்றி
                      
                                    புலவர் சா இராமாநுசம்

16 comments :

 1. ஒன்றா இரண்டா உரைப்பதற்கே-தமிழ்
  உணர்வே இன்றெனில நாமெதற்கே
  நன்றா இதுதான் தமிழ்நாடே//

  இதுதான் தமிழ்நாடே! இதுதான் தமிழ்நாடே!!

  ReplyDelete
 2. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  Reverie

  ReplyDelete
 3. கவிதை கலக்கல்

  அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. //பக்சே புறம்போக்கி
  கண்ணில் இனிமேல் நீர்கண்டால்-முகத்தில
  காறித் துப்ப மறவாதீர்//

  காறி மட்டுமா துப்புவோம்..ஏறியும் மிதிப்போம்...கவிதை அருமை

  ReplyDelete
 5. தமிழ் உணர்வு நன்குக்
  கொதித்துக் கொப்பளிக்கிறது,
  இந்தத் தங்களின் கவிதையில்!

  ReplyDelete
 6. உணர்ச்சி பொங்க வைக்கும் கவிதை.
  தமிழர்களே சொரணை கெட்டுப் போய் இருக்கையில் , மராட்டிய மைந்தர்களை என்ன சொல்ல முடியும் ?

  ReplyDelete
 7. என்றும் அருமை ஐயா

  ReplyDelete
 8. இதுதான் தமிழ நாடு..
  அருமையான கவிதை..

  ReplyDelete
 9. உணர்வு தரும் கவி வரிகள்
  அருமை என்பதை சொல்வதை விட தேவை என்றே சொல்லுவேன்
  இக்காலகட்டத்துக்கு இப்படியான கவிதைகள் தேவை
  புரட்ச்சி தரும் புயல் கவிஞன் நீங்கள்

  ReplyDelete
 10. கண்ணில் இனிமேல் நீர்கண்டால்-முகத்தில
  காறித் துப்ப மறவாதீர்//

  ஆமாம் ஐயா, உங்கள் ஆதங்கத்தினை அவர்கள் மும்பைக்கு வந்த அன்றே..இந்திய அணி ஆட்டத்தில் வெற்றியீட்டியதன் மூலமாக கொடுத்திருந்தார்களே.
  இதனை விட...பக்ஸேக்கு வேறு ஏதும் வேண்டுமா?

  ReplyDelete
 11. இன உணர்வின் அடையாளமாக உங்கள் கவிதை இங்கே படைக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 12.             ஒன்றா இரண்டா உரைப்பதற்கே-தமிழ்
                    உணர்வே இன்றெனில நாமெதற்கே
              நன்றா இதுதான் தமிழ்நாடே-இப்டி
                    நடந்தால் உனக்கது பெருங்கேடே
              குன்றாய் உறுதி நீகொண்டே-ஈழம்
                    கொடுத்திட ஏற்ற  வழிகண்டே

  அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா.. 

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 13. ஒன்றா இரண்டா உரைப்பதற்கே-தமிழ்
  உணர்வே இன்றெனில நாமெதற்கே
  நன்றா இதுதான் தமிழ்நாடே-இப்டி
  நடந்தால் உனக்கது பெருங்கேடே//இன உணர்வின் அடையாளமாக ............

  ReplyDelete
 14. உள்ளத்தின் வேக்காடு
  உரைத்து விட்டீர்

  தமிழனும்
  மராட்டியனும்
  இந்தியன் - ஆயின்
  இன உணர்வு வேறு

  பாக்கிஸ்தான் ஆடினால்
  பாய்ந்திருப்பார்கள் -பக்சே
  பந்தாடியது தமிழன் உயிர்தானே
  பாராமல் இருந்து விட்டார்கள்

  ReplyDelete
 15. வரிகள் நெருப்பு பொறி பறக்கிறதே ஐயா...

  மக்களின் மனதில் எழுச்சியும் மானமும் ஒன்றாய் எழும் உங்கள் வரிகளை படித்தால்.....

  இத்தனை உயிர்களை பலிவாங்கிவிட்டு இப்படி வெட்கமில்லாமல் திரிந்துக்கொண்டிருக்கும் அவனை எந்த தெய்வம் வந்து சம்ஹாரம் செய்யும் என்று நொடிக்கு நொடி காத்திருக்கும் எத்தனையோ பேர்களில் நானும் உண்டு....

  அன்பு வாழ்த்துகள் ஐயா எழுச்சிமிக்க வரிகளுக்கு....

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...