Saturday, September 3, 2011

விடியலுக்கான நாட்கள்


விடியலுக்கான நாட்கள் எப்போது-ஈழம்
விடுதலைப் பெறுவதும் எப்போது
கொடியவன் பக்சே தற்போது-ஆள
குமுறியே ஈழம் எழும்போது
வடியும் கண்ணீர் பேரலையாய்-பொங்கி
வந்திடமறவர் அலையலையாய்
முடியும் ஆட்சி அப்போதே-நாம்
முயல்வோம் முயல்வோம் இப்போதே

வெள்ளி முளைத்தால் விடிவதுண்டே-விடி
வெள்ளியாம் காந்தியின் வழிகொண்டே
கொள்ளி வாயுள பேயவனை-எதிர்க்
கொண்டே அழிப்போம் கொடியவனை
தள்ளிப் போகலாம் அக்காலம்-ஆனால்
தடுக்க இயலா முக்காலும்
முள்ளி வாய்க்கால் முடிவல்ல -மேலும்
முயலும் முயலும் நாம்வெல்ல

முடிவாய் வெற்றி நாம்பெறுவோம்-அகிம்சை
முறையில் நாளும் போரிடுவோம்
விடியும் நாளும் வந்திடுமே-பெரும்
வெற்றியை நமக்குத் தந்திடுமே
கொடியார் சிங்களர் கொடுங்கோலும்-அவர்
கொடுமைகள் முடிய அடிகோலும்
வெடியா அன்னவர் வெடிகுண்டே-உலகு
வெகுளும் வெடித்தால் அதுகண்டே

புலவர் சா இராமாநுசம்

46 comments :

  1. சீக்கிரம் விடியட்டும் ...கவிதை அருமை !

    ReplyDelete
  2. //முடிவாய் வெற்றி நாம்பெறுவோம்-அகிம்சை
    முறையில் நாளும் போரிடுவோம்
    விடியும் நாளும் வந்திடுமே-பெரும்
    வெற்றியை நமக்குத் தந்திடுமே///
    ம்ம் இலகு வரிகள் ஆனால் உண்மை!!

    ReplyDelete
  3. புரச்சி போன்ன்கும் வரிகள்
    ஒரு நாள் விடியும் ஈழம்

    ReplyDelete
  4. koodal bala said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. மைந்தன் சிவா said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. கவி அழகன் said...

    நன்றி தம்பீ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. முடியும் ஆட்சி அப்போதே-நாம்
    முயல்வோம் முயல்வோம் இப்போதே

    முள்ளி வாய்க்கால் முடிவல்ல -மேலும்
    முயலும் முயலும் நாம்வெல்ல

    வெடியா அன்னவர் வெடிகுண்டே-உலகு
    வெகுளும் வெடித்தால் அதுகண்டே

    அருமை அருமை
    புரட்சியாளர்களைச் சோரவிடாது
    நம்பிக்கையூட்டி துள்ளி எழச் செய்யும்
    அற்புதக் கவிதைஇது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முள்ளி வாய்க்கால் முடிவல்ல -மேலும்
    முயலும் முயலும் நாம்வெல்ல
    //
    முயல்வோம்!ஐயா வெல்லும் வரை!

    ReplyDelete
  9. Ramani said...

    அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    உங்கள் வரவு தாமதமானால் கூட ஏனோ
    நான் வாடிப்போகிறேன்
    நன்றி சகோ!

    ReplyDelete
  10. வெல்லும் வரை போராடுவோம்.

    ReplyDelete
  11. கோகுல் said...

    ஆக்கம் பெற ஊக்கம் தரும்
    கோகுலுக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஹிம்சை செய்து அக்கிரமங்களால் ஈழத்தை வசப்படுத்திய பக்சே வின் கொடுமைகள் அழிந்து ஈழம் மலரும், அதுவரை போராடுவோம் அஹிம்சா வழியில்....

    அருமையான வரிகள் ஐயா...

    தங்கள் உடல்நலம் தேவலையா ஐயா?

    ReplyDelete
  13. வேடந்தாங்கல் - கருன் *! said

    வெல்லும் வரை போராடுவோம்.

    ஒல்லும் வழியெலாம் போராடுவோம்.

    நன்றி! கருன் அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மஞ்சுபாஷிணி said...

    நினைத்தேன் வந்தீர் நூறுவயது!
    காணவில்லையே எனக்
    கவலைப்பட்டேன்!

    நன்றி! சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. //அகிம்சை முறையில் நாளும் போரிடுவோம்// அறப்போராட்டம் தான் வெல்லும்.அலகாக சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //தள்ளிப் போகலாம் அக்காலம்-ஆனால்
    தடுக்க இயலா முக்காலும்
    முள்ளி வாய்க்கால் முடிவல்ல -மேலும்
    முயலும் முயலும் நாம்வெல்ல//

    உண்மை...உண்மை...உண்மை!

    ReplyDelete
  17. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    நாளும் தருவீர் ஊக்கத்தை-நான்
    நவின்றிட கவிதை ஆக்கத்தை

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சத்ரியன் said...

    உண்மை...உண்மை...உண்மைதான்-என
    உரைத்தது முற்றும் திண்மைதான்

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. அருள் said...

    நன்றி!நண்பரே!

    முதற்கண் வலை வந்து வாழ்த்தீனீர்

    மீண்டும் வருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. பக்சேக்கு தெரியவில்லை பாதிக்க பட்டவர்களின் பதிலடி பலமாக இருக்குமென்று...... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்... தருமம் மறுபடியும் வெல்லும்போது.... தீயவர்கள் அல்லல் படுவார்கள்

    ReplyDelete
  21. முடிவாய் வெற்றி நாம்பெறுவோம்-அகிம்சை
    முறையில் நாளும் போரிடுவோம்//

    சரி தான் ஐயா...ஆனால் அகிம்சை முறையில் போரிடும்போது ஊடகங்களுக்கு தெரியபடுத்த வேண்டும்....இல்லையென்றால் இருக்குமிடம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள் கயவர்கள்

    ReplyDelete
  22. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
    முடிவில் தர்மமே வெல்லும்.
    அஹிம்சை முறையில் போராடுவோம்
    இறுதியில் வெற்றி நமக்கே.
    விடியும் காலம் விரைவில் வரட்டும்.

    அழகிய கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  23. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது இயற்கை... அதுபோல் இலங்கையிலும் நியாயம் வெல்லும்.. தனி ஈழம் பிறக்கும்... தமிழர்களின் வாழ்வு சிறக்கும்...

    ReplyDelete
  24. மாய உலகம் said...

    நன்றி! மாய!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மாய உலகம் said...

    உண்மை மாய உண்மை
    ஊடகங்களுக்கு தெரியபடுத்த வேண்டும் அதில்
    மாற்றமில்லை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. மகேந்திரன் said...

    விடியும் காலம் விரைவில் வரட்டும்.
    வரும் என்றே நம்புவோம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்
    நல்லதே நடக்கும் நம்புவோம்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. As I am away from my place I am not able to come and read the blogs Wherever it is possible I keep READING but am not in a position to comment in Tamil . Best wishes.

    ReplyDelete
  29. விடியும் காலம் விரைவில்...தமிழர்களின் வாழ்வு சிறக்கும்...கவிதை அருமை...***


    ரெவெரி

    ReplyDelete
  30. ஓர் நாள் விடியும்.

    நம்பிக்கையளிக்கும் கவிதை.

    ReplyDelete
  31. G.M Balasubramaniam said...

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. 108109272717372690516 said...

    நன்றி!

    வலை வந்தேன் ஓட்டுப் போட்டேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. தமிழ்வாசி - Prakash said...

    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. வெங்கட் நாகராஜ் said

    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. முனைவர்.இரா.குணசீலன் said

    ஓர் நாள் விடியும்

    உறுதி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. சென்னை பித்தன் said...

    உண்மைதான் பித்தரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. பேரெழுச்சியூட்டிடும் கவிதை.
    விரைவில் வெற்றி கிட்டட்டும்.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    vgk

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் said

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. வெடியா அன்னவர் வெடிகுண்டே-உலகு
    வெகுளும் வெடித்தால் அதுகண்டே/

    வெகுண்டெழும் வெடிகுண்டு இனி இல்லாமல் ஆகட்டும்.

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி said...

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. வணக்கம் ஐயா,
    அராஜகம் அழிந்து ஈழத் தமிழர்களுக்கான விடுதலை கிடைக்கும் நன் நாளே விடியலுக்கான நாள் என்பதனை உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

    ReplyDelete
  42. உணர்வெனும் தீயை நீறுபூக்க விடாமல் ஊதும் குழலாய் உங்கள் மூச்சில் விளைந்த கவிதை காட்டும் நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  43. விடியும் நாளும் வந்திடுமே
    வெற்றியை நமக்குத் தந்திடுமே
    அருமையான வரிகள்.சிறப்பான கவிதைக்கு,நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...