Wednesday, October 5, 2011

தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே

  

   காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
     கவிப்பெண்ணே கண்டவுடன் பயந்துச் சென்றாய்
   மாதரசி மனவானில் தேடுயொன்றா-நீ
     மறைந்தாயா அறியேனே இதும்நன்றா
  பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
     பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
   ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
      அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்
  
   கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
      கவிபாடி என்வலையில்  தரவும்நன்றே
   உற்றதுணை நீதானே மறந்தாபோனாய்-நெஞ்சம்
      உற்றதுயர் அறிந்துமா பறந்தேபோனாய்
   குற்றமென்ன கண்டாயா கூறுப்பெண்ணே-என்
      குறைகண்டு நீக்கிடவும் கவிதைப்பெண்ணே
   செற்றமது வேண்டாவே என்பாலென்றும்-நல்
      செம்மொழியே துணையாக  இருப்பாயென்றும்
  
    உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
      உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
   தொண்மைமிகு  தனித்தமிழே வருவாயாக-உன்னை
      தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
   தண்மைமிகு தென்றலென  தழுவநீயே-நெஞ்நில்
      தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
   திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
      தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே
         
                      புலவர் சா இராமாநுசம்
 

 

40 comments :

  1. கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
    கவிபாடி என்வலையில் தரவும்நன்றே//

    நன்றாக கவியை எங்களுக்கு தந்துகொண்டுதானிருக்கிறீர்கள் ஐயா

    ReplyDelete
  2. வழக்கம்போல தமிழ்தேன் கவிதை கலக்கல் ஐயா!

    ReplyDelete
  3. நல்ல கவிதை புலவரே.

    ReplyDelete
  4. ஐயா!
    தமிழ் எனும் கொம்புத்தேன்
    அமுதமாய் இனிக்கிறது..

    அருமை.. நன்றி..

    ReplyDelete
  5. தெவிட்டாத தித்திப்பு உங்கள் கவிதையில்....

    நல்லதோர் கவிதைக்கு உங்களுக்கு பூங்கொத்து!

    ReplyDelete
  6. கொம்புத்தேன் ரொம்ப இனிமையாக இருக்கிறது ஐயா...

    ReplyDelete
  7. மாய உலகம் said...


    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. மாய உலகம் said.

    நன்றி மாய!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வைரை சதிஷ் said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. தமிழ் விரும்பி said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. காந்தி பனங்கூர் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. தேன் தேன்
    தேனே தான்!

    ReplyDelete
  14. உங்கள் பாடல்கள் குறித்த இலக்கண தகவல்கள் அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்... இப்பவாவது தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?

    ReplyDelete
  15. மிகவும் அன்பும் அபிமானமும் உள்ளவர்களிடம்தான்
    குழந்தையும் கவிதையும்
    கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும்
    நாம்பொய் கோபம் கொண்டால் கூட
    உடன் மடியில் வந்து சாய்ந்துவிடும்
    இப்போது சாய்ந்துள்ளதைப்போல
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 5

    ReplyDelete
  16. வந்"தேன்"
    வாசித்"தேன்"
    இல்லை இல்லை
    சுவைத்"தேன்"
    அத்தனையும் "தேன்"

    ReplyDelete
  17. சத்ரியன் said.

    வந்தேன் வந்தேன் என்று
    வருவீர் அறிவேன் நன்று
    தந்தேன் நானும் ஒன்று
    தனய நன்றியாம் இன்று

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. suryajeeva said.


    http://tamilparks.50webs.com/learn_tamil/index.html

    நண்பரே
    மேலே குறிப்பிட்டுள்ள வலை தளம்
    சொன்றால் பாவிலக்கணம் பற்றி அனைத்தும்
    அறிந்து கொள்ளலாம்
    திரு,தமிழநம்பி அவர்கள் மிக அழகாக
    தெளிவாக எழுதியுள்ளார்
    தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டு
    நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. Ramani said..

    வாராது வந்த மாமணியே-எனை
    வாழ்த்திய என்னுடை இரமணியே
    சீராய் ஊட்டி வளர்த்தீரே-என்
    சிந்தையில் நிலையென நிலைத்தீரே
    ஊரால் உடலால் தனியேனும்-அன்பு
    உளத்தால் என்றும் ஒன்றானோம்
    யாரால் பிரித்திட இயலாதே-கல்லில்
    எழுதிய எழுத்து அழியாதே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. உங்களது கவியை படிக்கையில்
    சிந்தை மட்டுமல்ல நாவும் தேனாய்
    இனிக்குதய்யா...

    ReplyDelete
  22. கோகுல் said..

    கொம்புத்தேன் சுவைத்த
    கோகுல் நண்பரே
    தெம்புத்தான் தருகின்றீர்
    தினம்போல வருகின்றீர்
    அன்புத்தான் என்பால்
    அளவின்றி காட்டுகின்றீர்
    இன்புத்தான் எமக்கு-என்றும்
    எம்நன்றி உமக்கு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. இனிய மதிய வணக்கம் ஐயா,
    வலையுலகின் பெருமைகளைச் சொல்லி, கொம்புத் தேனாய் உங்களிற்கு கிடைத்த வலைப் பதிவின் நன்மைகளைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

    ReplyDelete
  24. உண்மையில் என் தாய் தமிழ் இனிக்கிறது
    ஆயிரம் தான் இருந்தாலும்
    என் தாய்க்கும் தமிழுக்கும் ஈடு இணை இல்லை

    ReplyDelete
  25. அழகிய வரிகளுடன் நல்ல கவிதை ஐயா

    தமிழ் மணம் 11

    ReplyDelete
  26. திகட்டாத கொம்புத் தேன்..

    இன்னும் என் செவியில் தித்திக்கிறது..

    ReplyDelete
  27. நல்ல துணையைப் பற்றி நறுமனம் வீசும் தேன் கவிதை!

    ReplyDelete
  28. வலைப்பூவை பெண்ணாக வர்ணித்து பாடிய நல்ல கவிதை புலவரே நன்றி

    ReplyDelete
  29. தண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
    தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
    திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
    தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே/

    திகட்டாத தேன் கவிதை!

    ReplyDelete
  30. மகேந்திரன் said..

    உளம் மகிழ பாராட்டும் சகோ!
    நன்றி நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. நிரூபன் said..

    எங்கெங்கு காணிலும் நிரூபன் ஐயா
    எப்படியும் வருவீரே அறிவன் ஐயா

    நன்றி நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. ஹைதர் அலி said.

    ஹைதர் அலி அவர்களே
    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. முனைவர்.இரா.குணசீலன் said

    மிக்க நன்றி! முனைவர் அவர்களே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. தனிமரம் said..

    தனிமரம் அவர்களே
    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. tamil said.

    அன்பரே! தங்கள் முதல்
    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. இராஜராஜேஸ்வரி said..

    நன்றி!சகோதரி நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. கொம்புத்தேன் இனிமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
    உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
    தொண்மைமிகு தனித்தமிழே வருவாயாக-உன்னை
    தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
    தண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
    தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே


    கொம்புத்தேனாக இனிக்கிரது கவிதை

    ReplyDelete
  39. இன்றென்ன கவிதைப் பெண்ணுடன் ஊடலோ?கொம்புத்தேன் வெகு இனிமை. என்றும்போல் அவள் உங்கள் கரங்களில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்க என் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...