Tuesday, October 11, 2011

முடிந்தது வாழ்வுப் பாதையென...

 
முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி

39 comments :

  1. சிறந்த தன்னம்பிக்கை வரிகள் ....

    ReplyDelete
  2. கொண்ட கொள்கையில் எத்துன்பம் வந்தாலும் வழுவாமல் இருப்பதே வெற்றி என்பது என் எண்ணம்.. என் கொள்கை "கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக"

    ReplyDelete
  3. //தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
    துவள வேண்டாம் அப்படியே
    ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
    ஏணியின் படியென தேறிடுவாய்
    காப்பது நம்மை நாமேதான் - நம்
    கண்ணைக் காப்பது இமையேதான்
    ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
    எண்ணிச் செயல்பட தவறாதே//

    அருமையான வரிகள்,படிக்கும் மனதினை தெம்புகொள்ள வைக்கும் உயரிய வரிகளை கவிதையாய் பொழிந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. அற்புதமான தன்னம்பிக்கை வரிகள்.,

    ReplyDelete
  5. தமிழ்மணம் 2 to 3

    நல்ல தன்னம்பிக்கையூட்டும் அழகான கவிதை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
    துவள வேண்டாம் அப்படியே

    அருமையான கவிதை.
    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  7. தன்னம்பிக்கை தரும் சிறப்பான கவிதை ஐயா!

    ReplyDelete
  8. கவிதை சிறப்பு தலைவரே!!
    வார்த்தை ஜாலம்!

    ReplyDelete
  9. koodal bala said

    நன்றி பாலா!
    உடல் நலம் எப்படி உள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. suryajeeva said.

    தவறாமல் வந்து கருத்துரை வழங்கும்
    தங்களிக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. ஸாதிகா said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. * வேடந்தாங்கல் - கருன் *! said..

    நன்றி!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Rathnavel said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. மைந்தன் சிவா said.

    நன்றி! மைந்தன் சிவா அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. தன்னம்பிக்கை உள்ளவரை-இத்
    தரணியில் வெல்வோர் எவருமில்லை
    உன்னால் முடியும் எனவுரைக்கும்
    உன்னதக்கவிதை உரைத்தீரே!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  18. அருமையான தன்னம்பிக்கை வரிகள்...வாழ்த்துக்கள் ஐயா ...

    ReplyDelete
  19. தோளில் தட்டிகொடுத்து
    வாழ்வின் வெற்றி மலையேறச் சொல்லும்
    அற்புதமான ஊக்கமூட்டும் வார்த்தைகள்.
    சிலைவடிக்கும் உளி போல வார்த்தைகள்
    கூர்மையாய் நெஞ்சில் பாய்ந்து
    உரமேற்றிவிட்டது புலவரே...

    ReplyDelete
  20. அழகான வரிகள் ஜயா

    ReplyDelete
  21. உன்
    வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
    மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
    மலர மனமெனும் விழிகாட்டும்//

    மிகவும் அருமையான சரியான வார்த்தைகள்... கவிதைக்கு நன்றி சகோ ஐயா.

    ReplyDelete
  22. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. சேட்டைக்காரன் said.

    // தன்னம்பிக்கை உள்ளவரை-இத்
    தரணியில் வெல்வோர் எவருமில்லை
    உன்னால் முடியும் எனவுரைக்கும்
    உன்னதக்கவிதை உரைத்தீரே!//

    கருத்தனை கவிதைவழி உரைத்தீரய்யா-நல்
    கற்கண்டாய் மனமதனை சுவைத்தய்யா
    நன்றிதனை நானிங்கு நவின்றேனய்யா
    இன்றுபோல் என்றும் நீர் வருவீரய்யா


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. ரெவெரி said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மகேந்திரன் said.

    சகோ!
    விரிவான பாராட்டுரை நல்கிய
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. K.s.s.Rajh said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. மாய உலகம் said.

    //உன்
    வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
    மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
    மலர மனமெனும் விழிகாட்டும்//

    எடுத்துக காட்டி பாராட்டிய சகோ!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. தன்னம்பிக்கை தரும் வரிகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி புலவரே....

    ReplyDelete
  29. ஒவ்வொரு வரிகளும் எம்மை ஊக்கப்படுத்துகின்றன ஐயா. நல்லதொரு கவிதையை தந்தமிக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  30. தன்னம்பிக்கை தரும் கவிதை ,பகிர்வுக்கு நன்றி ஐயா

    த.ம. 16

    ReplyDelete
  31. தன்னம்பிக்கை தரும் அருமையான கவிதை...நன்றி அண்ணே

    ReplyDelete
  32. வெங்கட் நாகராஜ் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. காந்தி பனங்கூர் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. M.R said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. விக்கியுலகம் said.


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. தன்னம்பிக்கையை ஊட்டும் அழகிய கவிதை வரிகள் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .............

    ReplyDelete
  37. தன்னம்பிக்கையூட்டும்
    தங்கமான வரிகள்.
    அருமை ஐயா..

    ReplyDelete
  38. இப்போது எனக்குத் தேவையான வைர வரிகள். மிகவும் நன்றியும் பாராட்டும் ஐயா.

    ReplyDelete
  39. மதிப்பிற்குரிய ஐயா,
    என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...