Thursday, October 13, 2011

மீண்டு(ம்) வருவார் அறிவீரே


 மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
  மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
  மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
  வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
  புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
  கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
  பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
  வேதனை எதையும் பண்ணாதே நீ 
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
  தோல்வியே உனகுலம் விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
  அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
  வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
  கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
  வீழப் போவது நீங்கள்தான்

                    புலவர் சா இராமாநுசம்
மீள் பதிவு
  

 

37 comments :

  1. அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
    அழுத கண்ணீர் கூற்றாக
    வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
    வாங்கி யாவது படித்தீரா
    கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
    கூறச் செய்தீர் மிகநன்றே
    வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
    வீழப் போவது நீங்கள்தான் // நல்ல அருமையான வரிகள், நன்றி..

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கவிதை !

    ReplyDelete
  3. நெஞ்சம் விம்மி வெளியேறியிருக்கும் வரிகள்.

    புலவ உங்கள் சாபம் நிச்சம் பலிக்கும்.

    ReplyDelete
  4. இலங்கை பிரச்சினை இனப் பிரச்சினை என்று மீறி மதப் பிரச்சினை என்று ஆகினால் தான் நன்றாக கொழுந்து விட்டு எரியும் போலிருக்கு

    ReplyDelete
  5. உங்களின் சாபம் பலிக்கட்டும்..

    ReplyDelete
  6. வெல்லப் போவது நாங்கள்தான்...ஆம் நாம் தான் புலவரே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. //வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
    வீணில் படுவீர் அலங்கோலம்
    பூண்டே அற்றுப் போவீரே-இந்த
    புலவனின் சாபம் ஆவீரே ///

    அருமை .உங்கள் சாப ம் பலிக்கட்டும்.

    ReplyDelete
  8. புலவர்களின் சாபம் வாங்கினவன், அவன் மன்னனாக இருந்தாலும் உருப்படப்போவதில்லை, புலவர் அறம் பாடியாச்சு இனி அனுபவியுங்கள் துரோகிகளும் எதிரிகளும்...

    ReplyDelete
  9. வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
    வீழப் போவது நீங்கள்தான்

    அருமையான வரிகள்

    ReplyDelete
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. koodal bala said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. சத்ரியன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. K.s.s.Rajh said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. suryajeeva said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
    வீழப் போவது நீங்கள்தான்
    //

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்... நன்றி புலவர் ஐயா

    ReplyDelete
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. குடிமகன் said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. ரெவெரி said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. ஸாதிகா said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. MANO நாஞ்சில் மனோ said

    ஓட்டுக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வைரை சதிஷ் said..

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. சென்னை பித்தன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மாய உலகம் said.

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சாபம் பலிக்கட்டும்..

    ReplyDelete
  27. கவிதை வரிகள் அருமை ஐயா

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,
    நலமா?

    விதையாக வீழ்ந்தோர் மீண்டும் புதுப் புலியாக வருவார்கள் என்பதனை உங்களின் இக் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  29. வையும் தமிழும் அழகு. சாபம் பலிக்கட்டும் ஐயா.

    ReplyDelete
  30. கலாநேசன் said.

    நன்றி கலாநேசன் அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. தமிழ்வாசி - Prakash said...

    நன்றி தமிழ்வாசி அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. நிரூபன் said.

    வணக்கம் நிரூபன் ,
    நலமா?

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. கீதா said...

    வணக்கம் சகோதரி!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. நெஞ்சம் விம்மி வெளியேறியிருக்கும் வரிகள்.
    மண் பற்றுக் கவிதை ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...