Monday, October 17, 2011

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

           

 

29 comments :

 1. அருமையான கவிதை ஐயா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இதை விட நறுக்காக சொல்ல முடியாது... சபாஷ் புலவரே

  ReplyDelete
 3. ////சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
  சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
  கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
  காரணம் யாருக்கும் புரியவே இல்லை////

  அழகான வரிகள் நல்ல கவிதை ஜயா

  ReplyDelete
 4. //மாணவர் சேவை–உலக
  மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை//
  உண்மை.
  நன்று.

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா,
  நலமா?

  உலகில் ஆசிரியர்களின் போதனை மூலமாகவும் சூழல் மாசுதனை கட்டுப்படுத்த முடியாது என்பதனை எளிமையாகச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

  ReplyDelete
 6. இயற்கையை போற்றுவோம்! ...உலகினைக் காப்போம் !!

  ReplyDelete
 7. \\பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
  பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே//
  .. அருமை அய்யா,
  தேவையான , விழிப்புணர்வைத் தரக் கூடிய கவிதை.
  நன்றி

  ReplyDelete
 8. அருமையான கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. இயற்கையை பேணவும்
  சுற்றுச் சூழல் காக்கவும்
  அருமையாய் ஒரு கவி
  படைத்திருக்கிறீர்கள் புலவரே.
  அருமை.

  ReplyDelete
 10. பொறுப்புடனே நற் கடமைகளை
  அழகிய கவிதைமூலம் இயம்பிய
  நல் இதயமே நீங்கள் வாழிய பல்லாண்டு ....
  மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கும் .

  ReplyDelete
 11. கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
  காரணம் யாருக்கும் புரியவே இல்லை

  நல்ல கவிதை புலவரே..

  ReplyDelete
 12. உயரிய கருத்துக்களை மாணவர்க்குக் கொண்டு செல்லுதல் என்பது மகத்தான சேவை.இன்றைய காலகட்டத்தில் இயற்கையைப் பாதுகாக்கும் இக்கருத்தை
  மாணவர் மத்தியில் வைப்பது மகத்தான சேவையே.

  ReplyDelete
 13. பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
  பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்த/

  அருமையாய் மாணவர்களுக்கு உணர்த்திய கருத்து .பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. நண்டு @நொரண்டு -ஈரோடு said.

  நன்றி! நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. கவி அழகன் said.

  நன்றி! மகனே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. suryajeeva said

  நன்றி! நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. K.s.s.Rajh said..

  நன்றி! அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. சென்னை பித்தன் said


  நன்றி! ஐயா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. நிரூபன் said..

  நன்றி! மகனே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. koodal bala said..


  நன்றி! அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. சிவகுமாரன் said


  நன்றி! அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. ரெவெரி said


  நன்றி! அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. மகேந்திரன் said...


  நன்றி! மகனே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. அம்பாளடியாள் said


  நன்றி! மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. முனைவர்.இரா.குணசீலன் said.


  நன்றி!முனைவரே !

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. Murugeswari Rajavel said...

  நன்றி! சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. இராஜராஜேஸ்வரி said  நன்றி! சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. அருமை ஐயா அருமை ...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...