Monday, October 24, 2011

இடுவீர் பிச்சை இடுவீரே  இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

52 comments :

 1. பொன்னான வரிகளால் நற் புத்தியொன்று சொன்னீர்கள் .உங்கள் எண்ணம்போல் ஏழைக்கும் இதுவரைக் கிட்டாத கல்வியது கிட்டட்டும் .மண்ணாளும் அரசனின் கடமையதை மகத்தான கவிதையில் எடுத்துரைத்த என் மனதாளும்தந்தைக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

  ReplyDelete
 2. ”கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து கான்பதில்தான் இன்பம் என் தோழா”-- பட்டுக்கோட்டையார்.
  நன்று.

  ReplyDelete
 3. கல்வியின் அவசியம் வெளிநாடுகளுக்கு போகிறவர்களுக்கு நல்லாவே தெரியும், கவிதை நச் புலவரே...!!!

  ReplyDelete
 4. //இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
  ஏழைகள் கற்க விடுவீரே
  கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
  கேடெனக் களையின் எதிர்நாளே//

  ஆரம்ப வரிகள் அருமை ஐயா..

  ReplyDelete
 5. //கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
  குமுறும் எரிமலை ஆவானே//

  தெரிந்தும் கல்வி வியாபாரிகளைக் கட்டுப்படுத்த யாருமில்லை. எரிமலை வெடித்தால் தான் சரிவரும்.

  அவர்கள் திருந்தும் வரை காத்திருத்தலை விட, திருத்திவிட துணிவது உத்தமம்.

  ReplyDelete
 6. suryajeeva said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. அம்பாளடியாள் said

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. சென்னை பித்தன் said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி ஐயா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. கவிதை வீதி... // சௌந்தர் // said

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. சம்பத்குமார் said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. சத்ரியன் said

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி மகனே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. கேட்பதற்கு ஆளில்லாமல் ஆடுபவர்கள்
  ஏனிந்த பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால்...
  பள்ளியில் குழந்தைகளை மிரட்ட்வார்கள்..
  கவியின் சமூக சாடல் நன்று புலவரே.
  கல்வியை விற்பனைகூடமாக்குபவர்கள்
  எதை வேண்டுமானாலும் விற்பார்கள்..

  ReplyDelete
 14. ////ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
  இருப்பது இறைவன் தானென்றீர்
  பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
  பிணைத்திட பணமது தாம்பாக
  வாழையின் அடிவரும் வாழையென-அவன்
  வாழ்ந்தே மடிவது கொடுமையென
  கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
  குமுறும் எரிமலை ஆவானே//////

  அற்புதமான வரிகள்

  தீபாவளி வாழ்த்துக்கள் ஜயா

  ReplyDelete
 15. கல்வியைச் சந்தைக்குக் கொண்டுவந்தவர்களைக் குறித்து சிந்திக்க வைக்கிற கவிதை!

  ReplyDelete
 16. இல்லோர் கல்வி இல்லோரா-இதை
  எடுத்து எவரும் சொல்லாரா
  நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
  நாட்டுக்கு நலமா கூறுங்கள்
  வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
  வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
  கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
  கவிதை இதுவென் தவற்தானா//

  அருமை அருமை.மனதைத்தொடும் கவிதை வரிகள்1

  ReplyDelete
 17. அற்புதமான வரிகள்,
  அழகான கவிதை..

  ReplyDelete
 18. இது மாதிரியான எளிமையான வார்த்தைகளுடன் சிறந்த ஆக்கத்தை காணும் போது இப்படி பட்டவருக்கு மகளாக பிறக்க வில்லையே என ஏங்குவதுண்டு சிறந்த ஆக்கம் வணகுகிறேன் .

  ReplyDelete
 19. ஐயா புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது வாருங்கள்
  வந்து உங்கள் பொன்னான கருத்தைக் கூறுங்கள் .பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் .மிக்க நன்றி ஊக்குவிப்புகளிற்கு .

  ReplyDelete
 20. மகேந்திரன் said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. K.s.s.Rajh said...

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. சேட்டைக்காரன் said...

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி அன்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. ஸாதிகா said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. வேடந்தாங்கல் - கருன் *! said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி அன்பரே!

  புலவர் சா இராமாநுசம் .

  ReplyDelete
 25. மாலதி said...


  வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. அம்பாளடியாள் said...


  விரைவில் வருவேன்
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. உரிமையை பிச்சை கேட்பதா

  கொள்ளை கூட்டத்தின் கல்வி சிக்கி நாட்கள் பலவாகி விட்டன.

  ReplyDelete
 28. அருமையிலும் அருமை !

  ReplyDelete
 29. நல்ல கவிதை.... வாழ்த்துகள்....

  ReplyDelete
 30. நல்ல கவிதை...
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

  ReplyDelete
 31. நல்ல கவிதை...

  தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ புலவரே... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

  ReplyDelete
 32. இல்லோர் கல்வி இல்லோரா-இதை
  எடுத்து எவரும் சொல்லாரா..


  நல்லாக் கேட்டீங்க புலவரே..

  ReplyDelete
 33. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 34. அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
  த.ம 15

  ReplyDelete
 35. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் .

  ReplyDelete
 37. ((ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
  இருப்பது இறைவன் தானென்றீர்))உண்மை வரிகள்

  ReplyDelete
 38. வணக்கம் ஐயா,
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 39. அற்புதமான கவிதை ஐயா ..
  ஏழைகளுக்கு தங்கள் கவிதை போல் அனித்தும் கிடைக்கட்டும்
  தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 40. அருமை ஐயா

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 41. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 42. வணக்கம் ஐய்யா.. 
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் 
  ஏழைகள் கல்வியைப்பற்றி அருமையான கவிதை படைத்துள்ளீர்கள் வாச்த்துக்கள்.

  ReplyDelete
 43. கல்விக்கு உதவி செய்வதில் எனக்கும் நாட்டம் கூட.முடிந்தளவு செய்தும் இருக்கிறேன்.அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கு !

  ReplyDelete
 44. பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் என்ற செங்கால் நாராய்த் தூதுப் பாடல் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 45. கல்வியை காசாக்கி
  கல்லாப்பெட்டிக்குள் மூடப்பார்க்கிறார்கள்
  கற்றவர்களே.

  கல்வியின் முக்கியத்துவம்-தங்கள்
  கவிவரிகளில் முத்துக்களாய்.

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 46. சமூக சாடல் ....கல்வி ஒளியேற்றும் சிந்தை. கருத்து உலகில் பரவட்டும். பணி தொடர இறையருள் கிட்டட்டும் ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 47. எண்ணங்குடையும் கேள்விகள்! விடையளிப்பார்தான் எவருமிலர்.

  நிலை மாறும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும்.சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை. பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 48. அருமையான பாடல் வரிகள் அய்யா வாழ்த்துக்கள். என்னிடம் இணையத்தொடர்பு இல்லை ஆதலால் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலுவதில்லை. என்றாவது நேரம் கிடைக்கும்போது எல்லாக்கவிதைகளையும் நேரம் நாள் குறிப்பிட்டு வலையில் பதித்துவிடுவேன். அந்தநாள் நேரம் வந்தவுடன் தானாக வெளியாகிவிடும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது தங்கள் எழுத்துக்களைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

  ReplyDelete
 49. அருமையான கவிதை ஐயா

  ReplyDelete
 50. //இல்லோர் கல்வி இல்லோரா-இதை
  எடுத்து எவரும் சொல்லாரா//
  கவிதை வரிகள் அருமை.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...