Monday, November 21, 2011

மாண்டவர் பிழைத்திடப் போமோ

அறிஞர்  அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை!
              இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!

இந்தியா என்பதோர் நாடே-என்ற
    எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
    நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
    வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
    பறந்திட வடக்கினைச் சாடே!

பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
     பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
     தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
     கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
     ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
     தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
     விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
     எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
     மறுமுறை நூழைந்திட ஆமோ!?
     
               புலவர் சா இராமாநுசம்
 

33 comments :

  1. ”””தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
    தலைகளில் சொகுசாகக் குந்தி
    வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
    விரட்டுவோம் அனைவரும் முந்தி”””

    அரிய கவிதை
    அறிய வேண்டிய கவிதை - இது
    அரிமாவின் கவிதை.

    ReplyDelete
  2. மொழி திணிப்பு பற்றிய கவிதை ,வார்த்தைகள் அருமை
    ஐயா .

    த.ம 3

    ReplyDelete
  3. மொழி திணிப்பு எதிரான அழகிய கவிதை....

    ReplyDelete
  4. தங்கள் மீது எனக்கு என்ன ஐயா கோவம்...

    கடந்த 10 நாட்களாக என்னுடைய இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது.


    தங்களின் கவி அமுதில் மூழ்க எனக்குதான் வாய்ப்பு கிடைக்க வில்லை...

    ReplyDelete
  5. இந்தி மொழி எதிர்ப்பு விஷயங்களை தாய்மண் ஆசிரியர் ஐயா அருமையார் (அருமைநாதன்) அவர்கள் சொல்லி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்....

    ReplyDelete
  6. இந்தி மறுமுறை நூழைந்திட ஆமோ!? //

    எனக்கு மற்று கிருத்து உள்ளது புலவரே...
    மன்னிக்கவும்,
    ஒரு மொழியை கற்றுக்கொண்டால் என்ன தவறு?

    ReplyDelete
  7. அருமையான எழுச்சியூட்டும் கவிதை
    மீண்டும் பதிவாக்கி தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    த.ம 8

    ReplyDelete
  8. கவிதை பழையது;உங்கள் சிந்தனை என்றும் புதியது!

    ReplyDelete
  9. தாய்மொழி தமிழ் இருக்க நாய் மொழி ஹிந்தி எதற்கு என போராடின முதிய நண்பர் ஒருத்தர், மும்பையில் வந்து பாஷை தெரியாமல் தடுமாறியபோது, அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதை பற்றி சொல்லி வருத்தப்பட்டார், எத்தனை மொழி கற்க முடியுமோ கற்று கொள்வது நல்லது என சொல்வார், வெளி மாநிலமோ, நாடுகளுக்கோ போனவர்களுக்கு நான் சொல்வது புரியும்...!!!

    ReplyDelete
  10. பேரறிஞர் அண்ணா'வின் பாராட்டை பெற்ற கவிதைக்கு வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  11. அருமையான மொழி விளையாடல் புலவரே....
    அன்றைய கவி..
    பழையதாக இருந்தாலும்
    இன்று படிக்கையிலும் புதிய தோற்றமாய் மனதுக்குள்
    பாய்கிறது....

    ReplyDelete
  12. இது போன்ற நாங்கள் எல்லாம் பிறப்பதற்கு முந்தய நிகழ்வுகளை எங்களுக்கு படம் பிடித்து காட்டுவது... மிகசரியான வழி காட்டுவது எல்லாமே உங்கள் போன்ற அறிவர்களினால் நாள் தான் நடக்க வேண்டும் இடுகைக்கு பாராட்டுகளும் பணிவான வணக்கங்களும்

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. A.R.ராஜகோபாலன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. M.R said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கவிதை வீதி... // சௌந்தர் // said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. கவிதை வீதி... // சௌந்தர் // said..

    விளக்கத்திற்கு நன்றி!சௌந்தர்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கவிதை வீதி... // சௌந்தர் // said

    விளக்கத்திற்கு நன்றி!சௌந்தர்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Ramani said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. * வேடந்தாங்கல் - கருன் *! sai

    அன்றையக் கால சூழ்நிலை அப்படி சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. சென்னை பித்தன் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ said

    உண்மைதான் மனோ!

    பலமுறை டெல்லி சென்ற போது
    துன்பப் பட்டிருக்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. மகேந்திரன் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மாலதி said

    நன்றி! மகளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. மொழி திணிப்பு பற்றிய கவிதை ...அருமை
    ஐயா

    ReplyDelete
  27. அருமையான கவிதை புலவரே...

    ReplyDelete
  28. பேரறிஞர் பாராட்டியதில் ஆச்சர்யமில்லை,நன்று அய்யா!

    ReplyDelete
  29. அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட கவிதையா?
    மிக மிக அருமை ஐயா.

    ReplyDelete
  30. உங்கள் உணர்வுக்கு நீங்களேதான் !

    ReplyDelete
  31. கருத்து ஏற்புடையதா கேள்விக்குறி எனினும் கவிதை தமிழுணர்வுக்கு எழுச்சித்திரி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...