Thursday, December 8, 2011

நானா நீயா பாரென்றே



 நானா நீயா பாரென்றே
     நடத்திய மத்திய அரசின்றே
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார்

முடங்கிப் போனதே அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்
 அடங்கிப் போனதே பலனென்ன
     அழிந்ததுப் பணமே கோடியன்ன
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்து தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

19 comments :

  1. அழகான சொற்களால்
    அரண் கட்டி
    ஆகமம் படைக்கும் கவிதை..
    ஊழலின் பின்னே ஓடியலைந்து
    விவேகமற்ற செயல்களுக்காய்
    அவைகளை ஒத்திவைத்து
    நாட்டின் முன்னேற்றத்தை
    தடுத்தாலும் நடவடிக்கைகள் செய்யும்
    அரசிற்கொர் இடித்துரைக்கவிதை...

    அருமை புலவரே.

    ReplyDelete
  2. ஐயா கவிதையிலும் அரசியலா? நம்மாளுங்க அதெயெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.... அமளி இல்லாம கூட்டம் நடந்தா அது அரசியல்வாதிக்கு அழகல்ல....


    வாசிக்க:
    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

    ReplyDelete
  3. //புற்று நோயாம் ஊழலிங்கே
    போனது என்றால் ஒழிவதெங்கே
    உற்றுப் பார்த்தால் மனிதரிலே
    ஊழல் செய்யாப் புனிதரிலே
    மற்றவர் செய்தால் ஊழலெனல்
    மறைப்பார் ஊழல் தம்மதெனில்
    கற்றவர் அறிந்தே செய்கின்றார்
    கல்லார் அறியாது செய்கின்றார் //

    ஊழலில் தோய்த்தெடுத்த உடம்பு வளர்க்கும் மனிதர்க்கு எத்தனை சொன்னாலும் உறைக்கமறுக்கிறதே.... விதியை நொந்து வீணே போகாமல் மனம் நொந்து கவிதை படைத்தீர். உரைத்த யாவும் உண்மையே எனினும் எடுபடுமோ அவரிடம் நியாயமும் நேர்மையும்?

    ReplyDelete
  4. //அனைத்து மக்களும் வெறுப்பானார்
    அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்//
    உண்மைதான். பாராளுமன்ற செய்திகளை படிப்பதைவிட உள்ளுர் அடிதடி செய்திகளை படிக்கலாம்.

    ReplyDelete
  5. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. எல்லாம் வியாபாரமாகிப்போன உலகில் அரசியல் ஊழல் என்றே ஆகிவிட்டது ஐயா.இனி அதை மாற்றவது பெரிய ஒரு கேள்விக்குறியே !

    ReplyDelete
  7. விழிப்புணர்வு கொடுங்கள்... அனைவரும் விழித்தெழுவோம்..

    ReplyDelete
  8. அய்யா, நீயா? நானா? பார் என்றே என வெச்சிருந்தீங்கண்ணா டைட்டில் கலக்கலா , டைமிங்கா இருந்திருக்கும். ஆனாலும் கருத்து கலக்கல்

    ReplyDelete
  9. இந்த நாசமா போன நடுவனரசு அடுத்த நாட்டுக்காரனுக்கு “மாமா” ( நம்ம நாட்டை கூட்டிக் கொடுப்பவனை வேறென்ன சொல்ல?) வேலை பாக்குறதலயே குறியா இருக்கு.

    குடிமக்களை குட்டிச்சுவராக்கும் முயற்சியை ”கை” விடச் சொன்னா கசக்குது.

    ReplyDelete
  10. அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா....!!!

    ReplyDelete
  11. நயமாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  12. செவிடன் காதில் ஊதிய சங்கு!

    ReplyDelete
  13. நல்ல கவிதை... ஆனால் சென்னை பித்தன் ஐயா சொன்னது நிஜம்... :(

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...