Wednesday, February 1, 2012

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு!



வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

27 comments :

  1. அற்புதமான வரி(லி)கள்,

    புனித புத்தர் மதமங்கே-விடுதலை
    புலிகளை அழித்த முறையெங்கே

    ReplyDelete
  2. அருமையான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. படமதைப் பார்த்து அழுதேனே-இனி
    பரமனைப் போற்றி எழுதேனே!

    அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் அய்யா!வாழ்க நலமுடன்

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  4. கண்ணீர்க்கவிதை.அருமை ஐயா.

    ReplyDelete
  5. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! கவிதை அருமை, அருமை ஐயா!

    ReplyDelete
  6. சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
    செழிக்க வாங்கித் தருவாயா///

    நோக்கம் நிறைவேறும் ஐயா... கவிதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. துயரத்தில் தோய்ந்த கவிதை மனதை நெகிழச் செய்தது.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    ஈழத்து கொடுமைகளை சனல் நான்கினூடாகப் பார்த்து மனிதாபிமானம் உள்ளவர்கள் மாத்திரம் வருந்துகிறார்கள். ஆனால் ஈனர்கள், கல் மனம் கொண்ட உலகத்து அரசுகள் கண்டுக்காது இருப்பது வேதனையே எனும் உண்மையினை கவிதையில் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  9. இறைவன் காப்பாற்றுவாராக ....

    ReplyDelete
  10. நெஞ்சம் கனத்து போனது அருமை ஐயா

    ReplyDelete
  11. மனதை நெகிழச் செய்யும் கவிதை வரிகள்

    ReplyDelete
  12. MOHAMED YASIR ARAFATH said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. dhanasekaran .S said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. எனது கவிதைகள்... said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. தமிழ்வாசி பிரகாஷ் said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கணேஷ் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. நிரூபன் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. koodal bala said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. sasikala said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. K.s.s.Rajh said

    வாழ்த்துக்கும் வருகைக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. ஐயா
    இதைப்பற்றி என்சொல்ல.
    வலிகளின் வேதனை உணர்ந்தவர்க்குதான் புரியும்.
    பதவியின் வாலிலே தொங்குவோர்க்குப் புரியாது.

    ReplyDelete
  24. துயரத்தில் தோய்ந்த கவிதை மனதை நெகிழச் செய்தது ஐயா...

    ReplyDelete
  25. அழுகைக்கு முடிவே இல்லை ஐயா.நன்றாகச் சொன்னீர்கள்.வேரோடு அழித்துவிடு என்று.உண்மையில் நன்று !

    ReplyDelete
  26. வெந்த மனத்தின் வேதனையை வெளிப்படுத்தும் மனத்தின் ஓலம் கேட்குமா அந்தப் பழிகாரர்களுக்கு?

    பாவினுள் உறைந்திருக்கும் பரிதவிப்பு கண்டு நெகிழ்கிறேன் ஐயா.

    ReplyDelete
  27. அழுகைக்கு முடிவே இல்லை ஐயா.நன்றாகச் சொன்னீர்கள்.வேரோடு அழித்துவிடு என்று.உண்மையில் நன்று !
    sorry hema for copy paste because i have no tamil typing thankyou

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...