Monday, February 13, 2012

காதல் கொள்வீர்! இதையும் காதில் கொள்வீர்!

 
அள்ளவரும் நீரலவே காதல்!-அதை
    அறியாது, இருவருமே சாதல்!
எள்ளுகின்ற நிலைதானே தருமே-மேலும்
    என்றென்றும் பழிதானே வருமே
உள்ளமதில் உறுதியுடன் நின்றே-காதல்
    உண்மையாக எதிர்தாலும் வென்றே
வெள்ளமதில் எதிர்நீச்சல் போன்றே-நீர்
    வீறுகெளல் வெற்றிக்குச் சான்றே!


உண்மைக்கு அழிவென்றும் வாரா-காதல்
    உள்ளங்கள் பேதங்கள் பாரா!
பெண்மைக்கு சிலசில குணமே-அவள்
    பெருமைக்கு வேண்டுவ மணமே!
ஆண்மைக்கு ஆசையே தூண்டும்-அதை
   அடக்கியே நடந்திட வேண்டும்!
மேன்மையும் வந்திடும் அதனால்-காதல்
   மேலும் பொலிவுறும் இதனால்


ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
    உள்ளத்தில் காதலும் கொள்வீர்!
இருவரின் மனமது ஒன்றுபட-எவர்
    எதிர்ப்புமே முற்றிலும் தவிடுபட
உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
    உணர்வு இன்றெனில் ஆகா
பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
    பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!

               புலவர் சா இராமாநுசம்

   


                     


34 comments :

  1. வணக்கம் ஐயா,
    நல்லா இருக்கீங்களா?
    இதில ஒரு "ல்” எழுத்தை தவற விட்டிட்டீங்க.


    அள்ளவரும் நீரலவே காதல்!-அதை

    ReplyDelete
  2. காதலர் இருவர் கருத்தொருமித்து செய்யும் காதலைப் பற்றிப் பேசி நிற்பதோடு, கொஞ்சம் வழி தவறின் துன்பம் எனவும் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

    ReplyDelete
  3. சிறுசுகளுக்கு நல்ல அட்வைஸ் ஐயா !

    ReplyDelete
  4. நல்ல கவிதை ஐய்யா
    சிறந்த அறிவுரைகள்

    நன்றி ஐயா

    ReplyDelete
  5. தெளிவான சிந்தித்தால் வாழ்க்கை ஆனந்தம்தான்...

    ReplyDelete
  6. மனமது ஒன்றுபட்டால்
    மந்திரங்கள் தேவையில்லை..

    காதல் என்ற உணர்வை
    காம உணர்ச்சி இல்லாது நெஞ்சில்
    வஞ்சமில்லாது ஏற்றிவிட்டால்
    காதல் இனிக்கும்...

    அருமையான காதலர் தின கவிதை ஐயா.

    ReplyDelete
  7. அருமையான கவிதை




    உங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .

    ReplyDelete
  8. பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
    பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!


    அழகாகச் சொன்னீர்கள் புலவரே

    ReplyDelete
  9. /ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
    உள்ளத்தில் காதலும் கொள்வீர்!
    இருவரின் மனமது ஒன்றுபட-எவர்
    எதிர்ப்புமே முற்றிலும் தவிடுபட//

    அருமையான வரிகள்

    ReplyDelete
  10. //உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
    உணர்வு இன்றெனில் ஆகா
    பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
    பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!//
    அருமை ஐயா!

    ReplyDelete
  11. உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
    உணர்வு இன்றெனில்

    இன்றைய காதலர்கள் அறியவேண்டிய
    மந்திரச் சொல் இது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. நல்லதொரு காதலர் தின கவிதை.
    வாழ்த்துகள் ஐயா!.

    ReplyDelete
  13. காதலர் தினத்தில் கலக்கல் கவிதை

    ReplyDelete
  14. //ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
    உள்ளத்தில் காதலும் கொள்வீர்!//சிறப்பான வரிகள் அன்பரே

    ReplyDelete
  15. காதலர் தினத்திற்கான சிறப்பு கவிதை சிறப்பாகவே இருக்கிறது புலவரே.....

    வாழ்த்துகள்....

    ReplyDelete
  16. நிரூபன் said...


    நிரூ!
    அங்கே, ல் போட்டால் ஓசை தட்டும்.
    நீர்+அலவே=நீரலவே. அல்லவே என்பது அலவே
    என்பது, சொல் வழக்கு!

    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. நிரூபன் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. koodal bala said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. அ .செய்யது அலி said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கவிதை வீதி... // சௌந்தர் // said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. மகேந்திரன் said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. மாலதி said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. guna thamizh said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. என் ராஜபாட்டை"- ராஜா said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. Ramani said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. Ramani said...

    வாக்கிட்டீர்!நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. தோழன் மபா, தமிழன் வீதி said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. KANA VARO said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. பிரேம்.சி said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. வெங்கட் நாகராஜ் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. சென்னை பித்தன் said

    சென்னை பித்தன் said

    ReplyDelete
  32. சென்னை பித்தன் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. காதல் வாழ்த்துகள் ஐயா.எங்கும் எதிலும் காதல் கொள்வோம் !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...