Wednesday, March 28, 2012

ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே!ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று
   அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே
கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம்
   கொதிப்படைய இக்கவிதை இங்கேவிண்டேன்
மாசுதரும் இசெயலே காவல்துறைக்கே-ஆளும்
    மாண்புகளும் பெறுவாராம் இதிலேபங்கே!
பேசுகின்றார் மக்கள்மிகத் துயரப்பட்டே-கறைப்
   போக்கிடவும்? துடைப்பீரா வருத்தப்பட்டே!

ஏணியாக அனைவரையும் ஏற்றிவிட்டே-வாழ்வில்
    என்றென்றும் வறுமையே நாளும்பட்டே
கேணியாக ஊருக்கே நீரும்தந்தார்-இன்று
    கேவலமாய்த் தள்ளிவிட அந்தோ!நொந்தார்!
தோணியாகக் கரைதனிலே ஏற்றிவிட்டே-இன்று
     துயரமெனும் தீயாலே எரியும்பட்டே
நாணுகின்ற நிலைதானே நெஞ்சில்கொண்டேன்-ஐயா
     நானுமொரு ஆ, சி(றி)ரியன் எனவேவிண்டேன்

நாட்டுக்கே கோவலமாம் இந்தக்காட்சி-மிக
     நல்லோரே சொல்லுங்கள் இதுவாமாட்சி
கேட்டுக்க ஆளில்லை! எண்ணவேண்டா-இந்தக்
    கொடுமைக்கே இனியேனும் எல்லைஉண்டா
ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
    உணராது நடப்பதும் என்னஅன்ன?
பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
    பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!

                         புலவர் சா இராமாநுசம்
   
      

25 comments :

 1. அருமையாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா? நாங்கள் விழித்துக் கொள்ளும் வரை, ஆட்சியிலுள்ளோர் ஒவ்வோர் தேர்தலின் போதும் எம்மை நாடி வந்து ஏமாற்றுக் கொண்டே இருப்பார்கள்! நாமக விழித்தால் தான் நன்மை உண்டு ஐயா.

  ReplyDelete
 3. ஒரு நல்லாசிரியருக்கே உரித்தான நற்பண்புடன், மனக்குமுறலை மகத்தானக் கவிதையாக்கி உரைத்துள்ளீர்கள். ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது மனம் அழுத்தும் வேதனை.

  ReplyDelete
 4. வேதனைய கொட்டிட்டீங்க அண்ணே!

  ReplyDelete
 5. நாட்டுக்கே கோவலமாம் இந்தக்காட்சி-மிக
  நல்லோரே சொல்லுங்கள் இதுவாமாட்சி
  கேட்டுக்க ஆளில்லை! எண்ணவேண்டா-இந்தக்
  கொடுமைக்கே இனியேனும் எல்லைஉண்டா
  ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
  உணராது நடப்பதும் என்னஅன்ன?
  பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
  பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!//வேதனை.

  ReplyDelete
 6. ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
  உணராது நடப்பதும் என்னஅன்ன?
  பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
  பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!

  ஒவ்வொரு செயலைப் பற்றியும் கொதிப்போடு நாம் எழுதுகிறோம் யாரும் உணர்ந்த பாடில்லை .

  ReplyDelete
 7. நாட்டுக்கோர் நலங்காக்கும் நல்லோர் எல்லாம்
  வீட்டுக்குள் ஒளிந்துகொண்டு உறங்கு கின்றார்!
  ஏட்டுக்குள் பாபடைத்துப் புழுங்கு கின்றோம்
  ஏனையோரோ அதைப்படித்தும் நழுவு கின்றார்!
  ஓட்டுக்கு வரும்போது பொருளை வாங்கி
  உடனடியாய் அவருக்கே மையை வைப்பார்!
  தீட்டுகின்ற பாட்டெல்லாம் திருந்த வைத்தால்
  தீதின்றி வாழ்ந்திடுவார் நம்ம வர்கள்!

  வளர்க உங்கள் தமிழ் தொண்டு!

  ReplyDelete
 8. தங்கள் மனதை பாதித்த அந்த காட்சி பற்றி சிறு முன்னுரையாவது கொடுத்திருந்தால், சற்று உதவியாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம் . பிழையெனில் பொறுத்தருள்க..

  ReplyDelete
 9. விழி
  கண்ட துயரம்
  வலிகொண்ட மனதின்
  ஓசை

  என்ன செய்ய ஐயா
  நிலைமாறும்

  ReplyDelete
 10. koodal bala said...

  நன்றி!பாலா
  பலபேர் வலை திறக்க மறுக்கிறது
  அதில் தங்கள் வலையும் ஒன்று!
  காரணம் புரியவில்லை வேறு யாருக்கேனும்
  இத் தொல்லை உண்டா?
  சொல்லுங்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. நிரூபன் said...

  நன்றி!நிரூபன்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. கீதமஞ்சரி said...

  நன்றி!சகோதரி!
  தங்கள் வலையும் திறக்கவில்லை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. விக்கியுலகம் said...

  நன்றி நண்பரே!

  தங்கள் வலையும் திறக்கவில்லை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. மாலதி said...

  நன்றி மகளே!

  தங்கள் வலையும் திறக்கவில்லை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. மாசுதரும் இசெயலே காவல்துறைக்கே-ஆளும்
  மாண்புகளும் பெறுவாராம் இதிலேபங்கே!//

  அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

  நீங்கள் கணினியில் தட்டும் போது சில எழுத்துப்பிழைகள் வருவது போல தெரிகிறது...சரிபார்க்கவும்...ஒருவேளை எனக்கு தெரிந்த தமிழ் கத்துக்குட்டி தமிழாகக்கூட இருக்கலாம் ஐயா...

  ReplyDelete
 16. AROUNA SELVAME said...

  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. பாரத்... பாரதி... said...

  அன்பரே!
  தங்கள் கருத்து தவறல்ல!சரியே!
  தருமபுரியில் விண்ணப்பம் பெற வந்த ஆசிரியர்களை
  காவல் துறை
  கன்னத்தில் அடித்தும் பிடித்துத் தள்ளி கீழே விழச்
  செய்த காட்சியும் மீண்டும் மீண்டும் காட்டியதை
  அனைவரும் பார்த்திருப்பர் என்று நான் கருதியதே
  தவறாகும். பொறுத்தருளக!

  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. செய்தாலி said...

  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. சசிகலா said...

  நன்றி!சகோதரி!
  தங்கள் வலையும் திறக்கவில்லை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. ரெவெரி said...

  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  தாங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையே!
  தள்ளாமை கண் பார்வை சற்று மங்கியநிலை
  பிறகு நானும் கண்டுள்ளேன்! பொறுத்தருள்க!

  ReplyDelete
 21. தெய்வத்திற்கும் முன்னர் வழிபட வேண்டிய
  ஆசிரியர்கள் நடத்தப்பட்ட முறை மிகவும் கண்டிக்கத்தக்கது.
  மனக்குமுறல்களுடன் கூறிய விதம் அருமை ஐயா.

  ReplyDelete
 22. ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மனக்குமுறல் வெளிப்பட்டிருக்கிறது வரிகளில்.ஏற்றிவிட்டவர்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பதே நிலையாகிறது.வலி !

  ReplyDelete
 23. இந்த செயலை இதுவரை அரசு கண்டிக்கவில்லை. யாராவது பொது நல வழக்கு போட்டால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 24. //தருமபுரியில் விண்ணப்பம் பெற வந்த ஆசிரியர்களை
  காவல் துறை
  கன்னத்தில் அடித்தும் பிடித்துத் தள்ளி கீழே விழச்
  செய்த காட்சி//


  பின்னர் தான் அதனை பற்றி தெரிந்து கொண்டேன், விளக்கியமைக்கு நன்றிகள்..

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...