Tuesday, April 10, 2012

செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது
    சினமின்றி இருப்பாரைக் காணல் அரிது
பெய்யாமல் பெய்திட்ட மழையும் பெரிது
    பிழையின்றி நடப்பதும் மிகவும் அரிது

அறம்செய்து வாழுதல் என்றும் பெரிது
    அழுக்காறு அவாவின்றி இருத்தல் அரிது
புறங்கூறல் இல்லாத குணமே பெரிது
    பிறர்குற்றம் பேசாமல் இருத்தல் அரிது

குற்றமெனில் ஏற்கின்ற தன்மை பெரிது
    கொள்கையிலே மாறாத ஆட்சி அரிது
சுற்றமதை வெறுக்காமல் காத்தல் பெரிது
    சுயநலமே இல்லாதார் அரிது! அரிது

சட்டத்தை மதிக்கின்ற பண்பே பெரிது
    சமுதாய ஒற்றுமை காணல் அரிது
திட்டமிட்டு வாழுதல் என்றும் பெரிது
   தேவைக்கே உரியபொருள் தேடல் அரிது

நன்றல்ல செய்தாலும் பொறுத்தல் பெரிது
    நலமிக்க நல்லோரின் நட்பே அரிது
குன்றன்ன தடைவரினும் நேர்மை பெரிது
    கோடாத நீதிவழி நடப்போர் அரிது

வழியிலா வழிநீக்கி வாழல் பெரிது
   வையத்து வாழ்வாங்கு வாழ்வார் அரிது!
பழியிலார் ஆவதே பெரிது பெரிது
    பயிலாது கல்விவரல் அரிது! அரிது

                                       புலவர்  சா இராமாநுசம்

32 comments :

 1. எப்படி ஒருவன் வாழனும் என்றும் எப்படி வாழக்கூடாது என்றும் அறம் உரைக்கும் கவிதை கண்டு மகிழ்ந்தேன் தொடருங்கள் பல கவிதைப் பாக்கள்!

  ReplyDelete
 2. அனைத்துப்பெரிதுகளும் அரிதுகளும் அருமை.

  உங்களைப்போல

  தினம் ஓர் அழகிய கவிதை தருவதும் பெரிது

  அது என் கண்ணில் பட்டு நான் கருத்துக்கூறுவது அரிது.

  ம்ன்னிக்க வேண்டுகிறேன், ஐயா.

  [பவர்கட், நேரமின்மை, போன்ற பலவிதத் தொல்லைகள்]

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வணக்கம் ஜயா எப்படி சுகம்?
  நான் கொஞ்ச நாட்களாக பதிவுலகப் பக்கம் வராததால் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை ரசிக்க முடியவில்லை. இப்போது மீண்டும் ரசிக்க முடிந்தது .அருமை

  ReplyDelete
 5. இங்கனம் அனைவரும் நடந்துவிடின் இருளில்லா மலரும் வாழ்வு அனைவருக்கும் ... அருமையான வரிகள்..

  ReplyDelete
 6. நுர்லெடுத்து நுர்ற்றாலும் கற்றல் பெரிது
  நுண்பொருளைக் கருபொருளாய் வடித்தல் பெரிது
  கோலெடுத்துக் கவியாக்கம் செய்யும் பெரியீர்
  கொடுக்கின்ற அடியாவும் உலகில் பெரிதே!

  அருமையான கவிதை ஐயா!

  ReplyDelete
 7. வாழும் வழி உரைத்தீர் நன்றே! அவசியம் கடைப்பிடிப்போம் இன்றே! நன்றி ஐயா!

  ReplyDelete
 8. இப்பெரிதுகளும் அரிதுகளும் நிகழ்ந்துவிட்டால் பூலோகம் சுவர்க்கமாகும் ....

  ReplyDelete
 9. நல்ல வழிகளைச் சொல்கிறது உங்கள் கவிதை.... நன்றி ஐயா.

  ReplyDelete
 10. வழியிலா வழிநீக்கி வாழல் பெரிது
  வையத்து வாழ்வாங்கு வாழ்வார் அரிது!
  பழியிலார் ஆவதே பெரிது பெரிது
  பயிலாது கல்விவரல் அரிது! அரிது//

  அருமையான கவிதை ஐயா...

  ReplyDelete
 11. சொன்ன செய்திகள் பெரிது!இவ்வாறு எடுத்துச் சொல்பவர் அரிது!

  ReplyDelete
 12. தனிமனித ஒழுக்கத்துடன்
  வாழும் வகை உரைத்தமை
  மனதில் நின்றது புலவர் ஐயா...

  ReplyDelete
 13. மரபின் வழியே கவிபாட-தமிழ் மரபைக் காப்பதென் வழிபாடே சுரபி அமுத சுரபியென-கருத்தும்
  சுரக்க நாளும் ஊற்றுமென வரமே தருவாய் என்தாயே-நான் வளரச் செய்தது தமிழ்நீயே கரமே
  குவித்து தொழுகின்றேன்-பெரும் களிப்பில் மூழ்கி எழுகின்றேன்
  மரபுக் கவிதைக்குத் தங்களிடம் குறையேதும் இல்லை ஐயா!!!.....
  தங்களின் கவிதைகள் என்றும் எம் நெஞ்சில் நிழலாக நின்று
  விடுகின்றனவே எங்கிருந்தாலும் என் மனம் உங்கள் கவிதை
  மழையில் நனைந்தபடியே சுகம் காண்கிறது.... வாழ்த்த வயது
  போதாது இருப்பினும் மன நிறைவோடு பாராட்டுகிறேன் .தங்களின்
  உடல் நலத்திலும் சிறிது அக்கறை கொள்ளுங்கள் மிக்க மகிழ்சி
  ஐயா தொடர் கவிதைப் பகிர்வுக்கு .

  ReplyDelete
 14. அரிது அரிது இது போன்ற கவிதை அரிது.
  பெரிது பெரிது கவிதைக்கான சொல்லாடல் பெரிது.

  ReplyDelete
 15. தனிமரம் said.

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. வை.கோபாலகிருஷ்ணன் said

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. K.s.s.Rajh said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. தினேஷ்குமார் said.

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. கவிதை வீதி... // சௌந்தர் // said

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. AROUNA SELVAME said...


  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. கணேஷ் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. koodal bala said.

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. வெங்கட் நாகராஜ் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. ரெவெரி said.

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. சென்னை பித்தன் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. மகேந்திரன் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. அம்பாளடியாள் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. ராஜ நடராஜன் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. ராஜ நடராஜன் said..

  நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...