Friday, April 13, 2012

சித்திரைப் பெண்ணே


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

36 comments :

  1. எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
    என்னென்ன புதுமைகள் தந்தாய்

    நல்ம் நல்கும் நந்தன புத்தாண்டு இனிய வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. சித்திரைப் பெண்ணுக்கு சிறப்பான வரவேற்பு.

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புத்தாண்டுக்கு சிறப்பான வரவேற்பு

    இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

    ReplyDelete
  5. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  6. சித்திரைப்பெண் சித்திரமாய் இருக்கிறாள்.

    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  7. சித்திரை மகளை
    சீராட்டி வாழ்த்தி
    அழைத்தமை
    அழகு ஐயா...

    ReplyDelete
  8. நந்தன ஆண்டில் மழை பெய்து பயிர் தழைத்து நாடு செழிக்கும் !புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  9. வணக்கம்!
    சித்திரைப் பெண்ணுக்கு வரவேற்பு தந்த கவிதை. உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சித்திரை பெண்னிற்கு அழகிய வரவேற்ப்பு ஐயா

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  12. \\இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமைத் தந்திடு வாயே\\

    சித்திரைப் பெண்ணிடம் வைத்த வேண்டுகோள் கண்டு நெகிழ்கிறேன். எந்நாளும் நலமே விளைய வாழ்த்தி சித்திரைப்பெண்ணை வரவேற்கிறேன், தங்களுடன் இணைந்து.

    ReplyDelete
  13. //இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமை தந்திடு வாயே//

    - அருமையான வரிகள் அய்யா. சித்திரையை வரவேற்ற விதம் அழகு. உங்களைப் போன்றவர்களால்தான் தமிழன்னையும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாள்.

    ReplyDelete
  14. வாரி வழங்கட்டும் - இனிய புத்தாண்டு

    ReplyDelete
  15. //இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமைத் தந்திடு வாயே//

    அருமையான வரிகள். அனைவருக்கும் நல்லதையே வாரி வழங்கட்டும் புத்தாண்டு....

    இனிய வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. தங்கள் வேண்டுகோள்கள் நிறைவேறட்டும்
    நாடு சுபிட்சமடையட்டும்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. T.N.MURALIDHARANsaid...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. தமிழ்வாசி பிரகாஷ் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. Vairai Sathishsaid

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. koodal bala said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. சத்ரியன்said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. திரன் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. மதுரை சொக்கன்said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ said...



    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. செய்தாலிsaid...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ராஜி said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. கீதமஞ்சரி said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. துரைடேனியல் said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. yathan Rajsaid...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. சிவகுமாரன் said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. வெங்கட் நாகராஜ்said...

    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. Ramani said...


    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...