Monday, May 28, 2012

ஏழரை நாட்டுச் சனிபோல!


ஏழரை நாட்டுச் சனிபோல-விலை
  ஏறின பெட்ரோல் நனிசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
   என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
   வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம்  பயனென்ன!?-இக்
  கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
   பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
  தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
  பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
  பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
   மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
   இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
  தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
   போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

               புலவர் சா இராமாநுசம்


38 comments :

  1. அனைவரின் ஆதங்கமாகவும் உங்களின் குரல் ஒலித்திருக்கிறது. மனம் வருந்துகிறது. இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நாம் கண்ட பலன் இதுதான் ஐயா! துன்பத்திலும் ஒரு இன்பம் என்பதுபோல இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் கவிதையின் நயம் ரசிக்க வைத்தது- அது இன்பம்!

    ReplyDelete
  2. வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
    வழங்கிய வாக்கும் அதுபோல!
    கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
    கொடுமைக்கு விடிவு இனியென்ன?

    எங்கள் ஆதங்கத்தை மிகச் சிறந்த கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. மிக அருமையான கவி ஜயா....

    ReplyDelete
  4. ஆதங்கத்தின் வெளிப்பாடு

    ReplyDelete
  5. ஏழரை நாட்டுச் சனிபோல-விலை
    ஏறின பெட்ரோல் நனிசால!
    ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
    என்றும் காண்பது நரகம்தான்!// அனைவரது ஆதங்கமும் தங்கள் வரிகளில் காண முடிகிறது ஐயா முதல் வரியே முத்தாய்ப்பாய் .

    ReplyDelete
  6. தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
    தவிப்போம் ஏதும் முயலாமல்!
    பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
    போடுமுன் சிந்திக்கத் துளியேனும்! ///////

    அருமை ஐயா! விலையேற்றம் எந்தளவு தூரம் நம்மை வருத்துகிறது என்பதை கவிதையில் அழகாகப் படம்பிடித்திருக்கிறீர்கள் ஐயா!

    இந்த இன்னல் தீரவேண்டும்!!

    ReplyDelete
  7. நம்
    நாட்டின் நவ நடப்பு
    உண்மையிலையே நாட்டை பிடித்து உலுக்கிறது
    அய்யா சொன்ன ஏழரை நாட்டு சனியன்

    ReplyDelete
  8. // பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
    போடுமுன் சிந்திக்கத் துளியேனும்! //

    புலவர் அய்யா நாம் யாருக்கு ஓட்டு போட்டாலும் இந்த கதைதான். இந்த கவிதைதான் வரும். ஏழரை வெகு விரைவில் தசாவதாரம் எடுக்கும்.

    ReplyDelete
  9. நடுத்தர மக்களின் நிலையை உரைக்கும் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் ஆதங்கம் மனம் நெகிழ்த்துகிறது. என்றைக்கும் ஏழையரை விட்டுவிலகாத அதிசய ஏழரை.

    ReplyDelete
  10. அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் நிலை வந்தால்தான் இந்த நாடு உருப்படும்.நன்று ஐயா.

    ReplyDelete
  11. மக்களுக்குத் தேவையான நினைவூட்டல் புலவரே..

    ReplyDelete
  12. மாலை
    வளையல்
    மூக்குத்தி

    பொன்னான
    எதுவுமே
    இல்லை
    எங்கள்
    குடிசையில்

    அவன்
    சொல்கிறான்

    இருக்கிறதாம்
    எங்களிடம்

    “பொன்னான
    வாக்குகள்”

    என்ற கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்குதான் நினைவுக்கு வந்தது புலவரே.

    ReplyDelete
  13. வங்கியாய் வாக்குகள் வாங்கி
    குப்பையில் போட்டுவிட்டு
    வாக்குகளால் சபையேறி
    நாக்கின் சொல் மறந்து
    மாக்களாய் போனவர்கள்
    பற்றிய நிதர்சனக்கவிதை ஐயா...

    ஆதங்கம்..

    ReplyDelete
  14. ஒரு முறை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் உற்பத்தி திறனுக்கும்,மக்கள் நலனுக்கும் இரண்டாம் முறையும் நிலையான ஆட்சி தேவையென்று முன்பெல்லாம் கருத்துக்களும்,அறிக்கைகளும் வெளிப்படும்.இரண்டாம் முறையும் ஒரே ஆட்சி ஊழலை வலுப்படுத்தவும் நொண்டிக்குதிரையாக ஓட மட்டுமே பயன்பட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக தமிழகமும்,மத்திய காங்கிரசுமே சாட்சி.

    மாற்றுக் கட்சிகளையும் பரிட்சித்துப் பார்ப்போம்.

    ReplyDelete
  15. கணேஷ் said...


    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. Ramanisaid...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. Ramanisaid...



    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. எஸ்தர் சபி said...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Seeni said...


    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. முஹம்மது யாஸிர் அரபாத்said...


    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. சசிகலா said...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. சசிகலா said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மாத்தியோசி - மணி said...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. செய்தாலி said...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோ said..

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. கீதமஞ்சரி said.

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said...

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. முனைவர்.இரா.குணசீலன் said..

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. முனைவர்.இரா.குணசீலன் said..

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. மகேந்திரன் said..

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ராஜ நடராஜன் said..

    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. பெட்ரோல் விலை

    தொடப்போகுது செஞ்சுரி!!

    இதுக்கு காரணம்

    எந்த ராஜதந்திரி??

    நீங்க எழுதிட்டீங்க மரபுக்கவிதை..

    இனி நமக்கு ஏற்ற

    வாகனம் கோவேறு கழுதை..

    ReplyDelete
  33. ArjunaSamy said...


    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  34. தமிழ் நாட்டில் மட்டும் இல்லைய்க...
    இங்கேயும் (பிரான்சு) அதே நிலைதாங்க.

    இருக்கிறவனுக்கு
    விலைவாசி ஏற்றம்
    ஒரு பிரட்சனை இல்லைங்க.

    இல்லாதவரைப்பற்றி
    அவர்களுக்கு
    ஒரு பிரட்சனையும் இல்லைதான்.

    வாயிருந்தும் தின்பதற்கு
    மட்டுமே பயன்படுத்தும்
    ஊமைகள் தானே வாக்காளர்கள்...!

    உங்கள் கவிதை
    அவலத்தின் ஆழத்தைப்
    பிட்டு பிட்டு வைக்கிறது.
    நன்றிங்க புலவர் ஐயா.

    ReplyDelete
  35. AROUNA SELVAME said...


    அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...