Wednesday, May 30, 2012

ஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு!


ஓடு மனிதா நீஓடு-இவ்     
  உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
  தேவை எதுவோ அதைநாடு!

சுயமாய் சிந்தனை செய்வாயா-உன் 
  சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
  பயன்தரக் காண்பாய் நீயாற்று!

தோல்வி வரினும் துவளாதே-உடன்   
   தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
   வேதனை முற்றும் தவிடுபட!

முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்    
   முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
  அவ்வழி செயலும் புரிவாயா!

இன்னார் இனியர் பாராதே-ஏதும்     
   இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
  உதவின் அதுவே பேரளவே!

அன்பின் வழியது உயிர்நிலையே-நம்    
   ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
   இல்லா உடம்பு ஆகியதே!

காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்    
  காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
   நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!


                   புலவர் சா இராமாநுசம்

 


 

41 comments :

  1. இனிய காலை வணக்கம் ஜயா
    காலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்த்தி

    ReplyDelete
  2. இன்னார் இனியர் பாராதே-ஏதும்
    இல்லை என்றே கூறாதே!
    உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
    உதவின் அதுவே பேரளவே!

    இதைப் பின்பற்றினாலே மகிழ்ச்சி நிச்சயம் !

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள கவிதை ஐயா....

    ReplyDelete
  4. நானும் ரிஷபன் சொன்னதுக்கு ஓ போடுறன்...மிக அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  5. மளிதன் ஓடிக் கொண்டுதான் இருக்கனும் ஜயா..

    ReplyDelete
  6. ////இன்னார் இனியர் பாராதே-ஏதும்
    இல்லை என்றே கூறாதே!
    உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
    உதவின் அதுவே பேரளவே!/////

    நான் ரசித்த அருமையான வரிகள்., அருமையான ஆக்கம் ஐயா ..!

    ReplyDelete
  7. உன்னால் முடிந்தது ஓரளவே. நீ முயன்றால் அதுவே பேரளவே - அருமையன வரிகள் ஐயா. நல்ல கருத்துள்ள கவிதையைப் படித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. தன்முனைப்பு கருத்துக்கள் கூறும் அருமையான கவியாக்கம், ஐயா.

    கரு கொண்ட நாள்முதலே ஓட்டம் தானே!

    ReplyDelete
  9. குறள் வழிக் கருத்துக்களை இங்கே
    ஒருங்கிணையக் கண்டேன் ஐயா.
    நல்வழி வாழ்ந்திடுவோம்
    நற்பலன் பெற்றிடுவோம்.

    ReplyDelete
  10. K.s.s.Rajh said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. ரிஷபன்said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. வெங்கட் நாகராஜ் said

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சிட்டுக்குருவிsaid...


    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. எஸ்தர் சபி said...


    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வரலாற்று சுவடுகள்said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. பா.கணேஷ் said

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சத்ரியன்said...


    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மகேந்திரன் said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Seenisaid...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. எங்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் ‘உதவி’யும் முன் நிற்கிறதே.முடிந்தவரை உதவி செய்து அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவோம் !

    ReplyDelete
  21. ஹேமா said...


    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. அருமையான கவிதை.
    வணங்குகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  23. AROUNA SELVAME said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. காலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்தி ஜயா ...

    ReplyDelete
  25. தட்டுதடுமாறும் நெஞ்சினருக்கு தன்னம்பிக்கையும் நன்னம்பிக்கையும் தரும் கவிதை.

    ReplyDelete
  26. இனிய கவிதை நடை அய்யா..

    ReplyDelete
  27. சிறப்பான கருத்து.அருமையான கவிதை

    ReplyDelete
  28. ரெவெரி said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. தி.தமிழ் இளங்கோ said.

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. கோவி said..

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. சென்னை பித்தன் said.

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. koodal bala said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. மனதினில் உள்ள சுமைகளை வலிகளைப்
    போக்க வல்லதோர் அரு மருந்தொன்றினைக்
    கண்டேன் அருமை!...அனுபவமும் கவி நயமும்
    நிறைந்த தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  34. //இன்னார் இனியர் பாராதே-ஏதும்
    இல்லை என்றே கூறாதே!
    உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
    உதவின் அதுவே பேரளவே!//
    நல்ல பாடம்!அழகு தமிழில் அழகான கருத்துக்கள்.

    ReplyDelete
  35. அழகான வரிகள் .. அருமையான கவிதை

    ReplyDelete
  36. அம்பாளடியாள் said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. T.N.MURALIDHARAN said...


    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  38. என் ராஜபாட்டை"- ராஜா said...

    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  39. "என் ராஜபாட்டை"- ராஜா said

    தங்கள் வலை திறக்க மறுக்கிறது மீண்டும்
    முயலவேன்!




    மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  40. பள்ளிக் குழந்தைகளுக்கு பாடநூலில் சேர்த்துப் பயிற்றுவித்தால் எதிர்காலத்தில் அவர்களை நல்ல குடிமக்களாய் வளர்க்க உதவும். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய அருமையான வாழ்வியல் வழிகாட்டியான கவிதை வரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...