Thursday, May 31, 2012

அவலம் அவலம்! அவலம் தானே!-

அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
  அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
  காண்பது இன்றே கவலை தானே!

மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
   மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய்  ஆனோம் தானே-நாம்
   புரிந்தும் மறந்து போவோம் தானே!

அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
   சுரணை இலையெனக் காட்டு கின்றார்!

பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
    பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
   செப்பிடின் வருவதோ பீதி எல்லை!

போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
   போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
   கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!

மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
   மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
   ஆர்பாட்டம் செய்வது அருவ ருக்கும்!

இரட்டை  வேடமே போடு கின்றார்-இங்கே
   ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
   ஆளவோர் செயலும் போகின் றதாம்!

மௌனம்  சம்மதம் என்ப தல்ல-மக்கள்
   மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
   கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!

                                 புலவர் சா இராமாநுசம்


31 comments :

  1. Arumaiyaana kavi aiya.... Ippadiyaana kavikalin moolamaavathu thirunthattum ullangkal.....from mobile

    ReplyDelete
  2. என்னத்தைச் சொல்லி என்ன ஐயா...செவிட்டுப் பிடாரிகளிடம் !

    ReplyDelete
  3. /அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
    சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
    சுரணை இலையெனக் காட்டு கின்றார்!


    //

    ஹா .ஹா . செம நக்கல்

    ReplyDelete
  4. எல்லா சுமையும் தாங்க சுமைதாங்கியாக நாம் இருக்கிறோமே

    ReplyDelete
  5. nalla saattai adikal!

    aatchiyaalarkalukkum-
    vaakku aliththavarkalukkum!

    vaazhthukkal!

    ReplyDelete
  6. //மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
    மனதில் இருப்பது மறதி யல்ல!
    கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
    கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!///

    தமிழகத்தில் கடந்த தேர்தலில் முந்தைய ஆட்சிக்கு உணர்த்தினோமே அதற்குள்ளாகவே மறந்துபோனார்களே இப்போது ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் .. :(

    ReplyDelete
  7. எத்தனை சொன்னாலும் புரியப் போவதில்லை இந்த அரசியல்வாதிகளுக்கு! மக்களுக்கும்....

    நல்ல பா புலவரே.

    ReplyDelete
  8. நாம கத்தி என்ன வாறது ஜயா.. அவங்க புரிய வேணுமே....

    ReplyDelete
  9. தகுந்த இடித்துரைகள் ஐயா...

    ReplyDelete
  10. ஒருநாள் கூத்திற்கு மீசையை வைத்து மேடையிலே ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளின், போலி வேடத்தை படமெடுத்துக் காட்டிய கவிதை!

    ReplyDelete
  11. //போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
    போடும் இங்குள ஊடகம் தானே!
    கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
    கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!... இது உண்மை என்று தெரியா மக்கள் கூட்டம்... அடுத்த முறையும் போடுமே போடுமே பண ஆட்டம்...

    ReplyDelete
  12. அரசியலின் இன்றைய யதார்த்தம் அப்படியே கவிதையில்....!

    ReplyDelete
  13. அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
    ஆர்பாட்டம் செய்வது அறுவ ருக்கும்!


    அருவருக்கும் என்றிருக்க வேண்டுமோ? அருவருப்பு தானே நீங்கள் சொல்ல வந்தது.. அறுவருக்கும் என்றால் ஆறு பேருக்கும் என்று பொருள் வருமே..

    ReplyDelete
  14. சிட்டுக்குருவி said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஹேமாsaid...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. என் ராஜபாட்டை"- ராஜா said...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. என் ராஜபாட்டை"- ராஜா said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. என் ராஜபாட்டை"- ராஜா said...

    வந்தேன் ! படித்தேன்

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Seeni said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. வரலாற்று சுவடுகள் said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வெங்கட் நாகராஜ் said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. எஸ்தர் சபிsaid...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மகேந்திரன் said...



    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோ said.

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. GowRami Ramanujam Solaimalai said..

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. மாத்தியோசி - மணி said.

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ரிஷபன் said...


    அன்பின் ஐய!
    தாங்கள் சுட்டிய பிழை உண்மையே!
    கவனிக்கத் தவறி விட்டேன்! திருத்திவிடுகிறேன்
    நன்றி!

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
    அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
    சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
    சுரணை இலையெனக் காட்டு கின்றார்!

    மனதை வாட்டுகிறது இந்த வரிகள்:(...

    ReplyDelete
  29. அம்பாளடியாள் said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. கவிதை அருமை ஐயா. நன்றிங்க.

    அடுத்தமுறை “செவிடனுக்குச் சங்கெதற்கு“ என்ற தலைப்பில் எங்களுக்கு கவிதை கொடுங்கள்.
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...