Friday, June 8, 2012

மாட்சிமை மிக்க மேயரய்யா!


ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னைக் காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையெனக் கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல்ல-இது
குத்தும் கவிதை ஆக்கமல்ல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
             புலவர் சா இராமாநுசம்

 

38 comments :

 1. முன்பு மன்னர்களுக்கு புலவர்கள்
  வேண்டுகோளை கவிதை வடிவில் அனுப்பிவைப்பதைப்போல
  தாங்கள் கவிதைக் கடிதம் அனுப்பியுள்ளீர்கள்
  முன்பு மன்னர்கள் படித்து ஆவன செய்தார்கள்
  கலியுக மன்னர்கள் என்ன செய்கிறார்கள் பார்ப்போம்

  ReplyDelete
 2. சிந்திக்க வேண்டிய கவிதை ஜயா...

  ReplyDelete
 3. ayya ramani sonnthe-
  enathum!

  ReplyDelete
 4. சிங்காரச் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடெங்கும் இந்த நிலைமைதான். உங்கள் கவிதையை வலைப் பதிவுகளோடு நிறுத்தி விடாமல் நகலெடுத்து மேயருக்கும் அனுப்பி வையுங்கள்.

  ReplyDelete
 5. உண்மைதான் ஐயா அரசியலால் வந்த குப்பைகளை அரசாங்கம் தான் ஆவன செய்ய வேண்டும் தமிழ் இளங்கோ கூறியது போல மேயருக்கு அனுப்புங்கள் .

  ReplyDelete
 6. கவிதையில் ஒரு பெட்டிஷன்.. கலக்கல்

  ReplyDelete
 7. புலவர் ஐயா.... நீங்கள் வீட்டில் கூட கவிதையில் அதுவும் மரபுக் கவிதையில் தான் பேசுவீர்களோ....
  அருமையாக உள்ளது ஐயா சொல்லவந்த கருத்தும் சொல்லிய விதமும்...

  வணங்குகிறேன் ஐயா.

  ReplyDelete
 8. சிங்காரச் சென்னையாக என்று மாறும்?அருமை

  ReplyDelete
 9. நன்மை ஒன்றே உடன்தேவை-மா
  நகர ஆட்சிக்கு இப்பாவை!
  சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
  செய்வீர் வேறு வழியில்லை!
  //
  மேயருக்கு எழுதப்படிக்க தெரியுமா புலவரே...பேசாம மொழிபெயர்த்து தமிழில் விண்ணப்பமாய் அனுப்புங்க...-:)

  ReplyDelete
 10. Ramani said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 11. Ramani said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 12. எஸ்தர் சபி said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 13. Seeni said..

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 14. தி.தமிழ் இளங்கோ said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 15. Sasi Kala said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 16. Sasi Kala said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 17. "என் ராஜபாட்டை"- ராஜா said.

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 18. என் ராஜபாட்டை"- ராஜா said.

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 19. AROUNA SELVAME said

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 20. சென்னை பித்தன் said..

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 21. ரெவெரி said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 22. சிங்கார சென்னையின் நிலையை இன்றைய நிலையை புட்டுபுட்டு வைத்துவிட்டீர்கள்..,

  தா.மா.ஓ = 8

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
  வேதனை விளைவாம் இதுசொல்லஃஃஃஃஃஃ
  வணக்கம் ஐயா,ஆவன செய்தல் அவசியம்.இங்கும் எங்கும் இதே நிலை தான்...என்று தீருமோ??,

  ReplyDelete
 25. அதுதான் சொல்கிறேன் உங்களுக்கு நீங்களே நிகர் மெட்டுப்போட்டு பிரபல பாடலாக்கி உரியவர்களிடம் சம்ர்ப்பிக்க வேண்டும்...அப்படி சம்ர்ப்பித்தாலும் சிறந்த பாடல் என்ற விருதை தந்திவிட்டு சொல்லப்பட்ட விடயங்களை விட்டுவிடுவார்கள் போலும்

  ReplyDelete
 26. வரலாற்று சுவடுகள் said...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 27. Athisaya said...


  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 28. சிட்டுக்குருவிsaid...


  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 29. சிட்டுக்குருவிsaid...


  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 30. நல்லதொரு விண்ணப்பம் ஐயா.சம்பந்தப்பட்டவர்கள் கைக்குச் சேர வைத்தால் நல்லது !

  ReplyDelete
 31. அருமையான கவிதை! மேயர் பார்வைக்குச் சென்றால், ஏதாவது நடவடிக்கை எடுத்தால்‌ சென்னை ‘எழில்மிகு சென்னை’யாக நமக்குக் கிடைக்கும். தீபத்தை ஏற்றியிருக்கிறீர்கள். பிரகாசிக்கட்டும் என்பதே அனைவரின் விருப்பம். (சில நாட்கள் பெங்களூரு சென்றிருந்ததால் மிக தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்க.)

  ReplyDelete
 32. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/06/7.html

  ReplyDelete
 33. ஹேமா said..

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 34. பா.கணேஷ் said.

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 35. T.N.MURALIDHARAN said.

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...