Wednesday, June 6, 2012

அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே!


அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

                               புலவர் சா இராமாநுசம்

23 comments :

  1. பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
    படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
    தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
    தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!// இதை விட தெளிவா யாரும் சொல்ல முடியாது ஐயா பகுத்தறிந்து செயல்கள் செய்தால் சிறப்பாய் பெருமை கிட்டும் உணருவார் உண்டோ ?

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் அற்புதம் எப்படி ஐயா...?

    ReplyDelete
  3. ஔவை பாட்டியின் சில வரிகள் எனக்கு ஞாபகம் வருகிறது ஜயா இதை படிக்கும் போது..


    மிக அருமை ஜயா....

    ReplyDelete
  4. மனிதனாய் வாழ்வதன் நோக்கத்தை அறிவுரையாய் வழங்கிய கவிதை.

    ReplyDelete
  5. பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
    இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!“

    அருமைங்க புலவர் ஐயா.
    கருத்திற்கு பாட்டழகாய்த் தெரிகிறதா..? பாடலுக்குப் பொருளழகாய்த் தெரிகிறதா...?
    எதுகை மோனையால் சந்த ஓசை மிளிர்கிறதா...?

    உங்கள் பாடலில் எது முந்தி எது பிந்தி வருகிறது என்றே தெரியவில்லை புலவரே...
    ஒவ்வொரு முறையும் உங்கள் பாடலைக் கண்டு பொறாமை வருகிறது எனக்கு.
    வணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  6. அரிதான இந்த மானிடப் பிறப்பைப் பயனுள்ளதாக்குவது நம் கடமை.
    கவிதை அருமை

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரியும் அற்புதம்....

    ReplyDelete
  8. பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
    இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!
    //
    அறிவுரைக்கவிதை அருமை புலவரே...

    ReplyDelete
  9. ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!//
    அற்புத வரிகளில் கவி படைத்துள்ளீர்கள் அருமை.

    ReplyDelete
  10. பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!!

    சிந்தித்து செயல்பட வேண்டிய
    வரிகள் ஐயா...
    இன்று விட்டால் நாளை இந்த நிமிடம் கிடைக்காது..
    நற்பண்புகளை இன்றே விதைத்து
    நாளை நன்மைகளை அறுவடை செய்க
    என அறிவுறுத்தும் அறிவேற்றும் கவி ஐயா...

    ReplyDelete
  11. கூகிள்சிறி .கொம் said...

    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Sasi Kalasaid...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சிட்டுக்குருவி said...



    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. எஸ்தர் சபிsaid...

    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Seeni said...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. NIZAMUDEENsaid...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. AROUNA SELVAME said...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சென்னை பித்தன்said...

    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. ரெவெரிsaid...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. ஸாதிகா said


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. மகேந்திரன்said...


    வருகைக்கு நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...