Tuesday, June 19, 2012

போனாய் எங்கே தமிழ்மணமே?


போனாய்  எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்
   பார்த்திட மறையும் தமிழ்மணமே!
ஆனாய்  என்ன  அறியோமே-எங்கள்
   ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
  தேடி  எடுத்துத் தருவாயே!
மானெனப் பாய்ந்து போனதுஏன்-இந்த
   மறையும் நிலைதான் ஆனதுஏன்?


எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
   எதிரியை எதிர்த்து வெல்வாயா?
இங்கே பலரும்  அலைகின்றார்-தினம்
     ஏங்கி  ஏங்கி குலைகின்றார்!
அங்கே தங்கி விடுவாயா-மனம்
     அஞ்சுதே துயரம் படுவாயா?
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
   பதிவரின் துயரை உடன்பாரும்!
 
முன்னே ஒருமுறை இவ்வாறே-துயர்
   மூண்டிடச் செய்தல் எவ்வாறே!
என்னே அருமை கண்மணியே-இது
   ஏற்புடை செயலா தமிழ்மணியே!
பொன்னே என்றுனை காத்திடவும்-தினம்
    போற்றி வரவை நோக்கிடவும்,
மின்னே போலத் விரைந்திடுவாய்-வலை
   மேதினிக் காணத் தந்திடுவாய்!
 
           புலவர் சா இராமாநுசம்
    
  

42 comments :

 1. தமிழ்மணத்தை காணாமல் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது கணினிப் பிழையோ என்று நினைத்தேன்.எங்கள் அனைவரின் கருத்தையும் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

  ReplyDelete
 2. அய்யா அதற்க்குக் காரணம் நான் தானோ என்று சற்று பயமாய் உள்ளது. அரும்பாடு பட்டு மூன்று மாதங்களுக்குப் பின் இப்பொழுது தான் ஒரு வழியை தமிழ் மனத்தில் இணைந்தேன், இணைந்த அடுத்த நாள் காணவில்லை. உங்களைப் போல் தமிழ் மனதின் வரவை நானும் எதிர்பார்த்து காத்துள்ளேன்

  ReplyDelete
 3. தமிழ் மணம் காணாது தவிக்கும், தமிழ் மனம் கொண்ட பதிவர்கள் அனைவரது ஆதங்கத்தையும் வெளியே கொண்டு வந்து விட்டது , உங்கள் கவிதை.

  ReplyDelete
 4. புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைப் பதிவை, சங்கமம் ( http://isangamam.com ) என்ற திரட்டியில் இணைக்கவும். அதில் தொடர்ச்சியாக சில நாட்கள் பதிவுகளை மற்றவர்கள் பார்வையிடலாம். நன்றி!

  ReplyDelete
 5. ஐயோ தமிழ்மணத்துக்கு என்ன நேர்ந்தது...:(

  ReplyDelete
 6. என்ன பிரச்னையோ தெரியலை... தமிழ்மணம் திரட்டி காணாமப் போச்சுதுன்னு கவலை மட்டும் பட்டேன் நான். அழகுத் தமிழ்க் கவிதையா வடிச்சுட்டீங்க நீங்க. இந்தத் தமிழின் மணத்தை நுகர்ந்ததுல அந்தத் தமிழ்மணம் காணாமப் போன கவலைகூடப் போயிட்டுது. அருமை ஐயா.

  ReplyDelete
 7. தமிழ்மணத்தை காணவில்லை என்று தமிழ்மணம் வீச கவிதையை படைத்துவிட்டீர்கள்..தமிழ்மணத்தில் என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை ஐயா..தளத்தை புதுப்பிக்கிறார்கள் என நினைக்கிறேன்..

  ReplyDelete
 8. தங்கள் கவிதையை படித்தபோது, ‘தமிழ்மணமே! எங்களை தவிக்கவிட்டு எங்குபோனாய்?’ எனப் பாடத் தோன்றுகிறது.

  ReplyDelete
 9. குறைகளை களைந்துகொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 10. I'm back -ங்ற மாதிரி இப்போ தமிழ்மணம் திரும்பி வந்திருச்சு :)

  ReplyDelete
 11. தங்கள் கவிதை கேட்ட மாயமோ என்னவோ
  தமிழ்மணம் தற்போது செயல்படத் துவங்கிவிட்டது
  எதையும் சிறந்த கவிதையாய் தந்துவிடும் தங்கள் சீரிய திறம்
  கண்டு மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. உங்கள் கவிதைச் சுவையில் மயங்கி வந்து விட்டதே தமிழ் மணம்!!

  ReplyDelete
 13. தங்கள் வரி படித்ததும் வந்து விட்டது தமிழ் மணம். ஐயா தங்களை வந்து சந்திக்க முடியாமல் போனது குறித்து வருந்துகிறேன் . விரைவில் வருவேன் .

  ReplyDelete
 14. நானும் தமிழ்மணத்தை காணவில்லை என்று தேடினேன் இப்ப திரும்ப வந்திவிட்டது ஜயா

  கவிதை அருமை

  ReplyDelete
 15. நானும் தவித்துத் தான் போனேன் ))

  ReplyDelete
 16. காணாமல் போன தமிழ்மணத்தினைப் பற்றிய

  தமிழ் மணம் வீசும் பா....

  இப்போது திரும்பி வந்துவிட்டதால் எட்டாம் வாக்கினை அளித்தேன் உங்கள் கவிதைக்கு!

  ReplyDelete
 17. உணர்வுடன்கூடிய நல்ல கவிதை.

  ReplyDelete
 18. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு....-:)
  அருமை ஐயா...

  ReplyDelete
 19. T.N.MURALIDHARAN said...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 20. பாட்டுப்பாடியே மழையை வரவழித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
  ஆனால் நீங்கள்....
  கவிபாடியே காணாமல் போன
  தமிழ்மணத்தைக் கண்டுபிடித்தக் கொடுத்து விட்டீர்கள்.
  உங்கள் புலமையே... புலமைதான்!!!
  நன்றி புலவர் ஐயா.

  ReplyDelete
 21. சீனு said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 22. தி.தமிழ் இளங்கோ said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 23. தி.தமிழ் இளங்கோ said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்
  19 June 2012 9:04 AM

  ReplyDelete
 24. சிட்டுக்குருவி said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 25. பா.கணேஷ் said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 26. மதுமதி said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 27. வே.நடனசபாபதி said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 28. வரலாற்று சுவடுகள் said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 29. வரலாற்று சுவடுகள் said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 30. Ramani said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 31. Ramani said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 32. சென்னை பித்தன் said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 33. Sasi Kala said...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 34. K.s.s.Rajh said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 35. கொக்கரக்கோ..!!! said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 36. வெங்கட் நாகராஜ் said

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 37. Amudhavan said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 38. ரெவெரி said.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 39. AROUNA SELVAME said..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 40. அடிக்கடி இப்படி ஆகின்ற நிலையில் அருமையான கவிதை புலவரே!

  ReplyDelete
 41. கண்மணியே, தமிழ்மணியே என்று தமிழ்மணத்தைக் கொஞ்சிய அழகினை மிகவும் ரசித்தேன். தன்னைப் பற்றித் தங்களைக் கவிபாட வைக்கவென்றே கண்ணாமூச்சி ஆடியதோ தமிழ்மணம்? அருமையான கவிதை. பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...