Wednesday, November 7, 2012

அன்றேநான் சொன்னனே கேட்கவில்லை -கைது ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை
அன்றேநான் சொன்னனே  கேட்கவில்லை கைது
    ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை
ஒன்றேதான் இதற்குவழி உறுதி! வெல்வோம் நாம்
    ஒன்றுபட்டு ஒருகுரலாய் ஒலிக்க சொல்வோம்!
நன்றேதான் நாம்கூடி திட்டமிடுவோம் ஏற்ற
    நாள்தன்னை வலைதன்னில் எட்டவிடுவோம்
என்றேநான் உறவுகளே தூண்டுகின்றேன் -செய்ய
    எவர்வரினினும் தலைவணங்கி வேண்டுகின்றேன்

யார்செய்தார் என்பதல்ல இந்தப்பணியே இதை
      இப்படியே விட்டாலே தொற்றும்பிணியே
சீர்செய்ய முயல்வார்க்கு கைகொடுப்போம் கூடி
    சிந்தித்து செயல்பட முடிவெடுப்போம்
பேர்பெறவா! அல்லயிது உரிமைக்காக்க-அறப்
     போராடி நாடிவரும் துன்பம்போக்க
தேர்தன்னை பலர்கூடி இழுத்தல்போல-உடன்
     திரளுங்கள் உறவுகளே நாளும்சால
                               புலவர் சா இராமாநுசம்


தருமி அவர்கள் தங்களுடைய வலைப்பூவில்(blog) கூறிஇருந்தார் அது அப்படியே அனைவருக்காகவும் அறிந்து கொள்ள கிழே அப்படியே தந்து உள்ளேன் அனைவரும் இந்த செய்தியை பதிவிடுவோம்,,,

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம்(book) எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

22 comments :

 1. ஆம் ஐயா. இது தேர் இழுக்கும் வேலைதான். அனைவரும் ஒன்றுபட்டால் தான் இது சாத்தியம். கவிஞரின் வாக்கு தவறாகுமா என்ன....? அனைவரும் ஒருங்கிணைவோம். நமது பலத்தை நிரூபிப்போம்,

  ReplyDelete
 2. அய்யா அவர்களுக்கு தங்களின் இப்பதிவு எனது வலைப்பூவில் இணைப்புக்கொடுத்துள்ளேன் நன்ற்யுடன்...

  ReplyDelete
 3. தங்கள் வாக்கு மெய்யாகி விட்டது.இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 4. செய்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் ஐயா! ஒன்றுபடுவோம்! எதிர்ப்போம்!

  ReplyDelete
 5. சிறப்பாகச் சொன்னீர்களையா!

  ReplyDelete
 6. சொற்கள் தேடுகிறேன்....சொல்லத்தெரியவில்லை.

  ReplyDelete
 7. உண்மை தான்... அய்யா

  ReplyDelete
 8. வணக்கம் பெருந்தகையே
  நலமா?
  நீண்ட இடைவெளி ஆகிவிட்டது...

  ஒன்றிணைவோம்
  ஓங்கிக் குரல் கொடுப்போம்...

  ReplyDelete
 9. நன்றாக சொன்னீர்கள் ஐயா...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...