இதுவென் பதிவே
மூன்னூற்று ஐம்பதே
புதுமலர் போன்றே
பூத்திட காத்திட
மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட
நிதியெனத் தந்த
நீங்களே ஆகும் !
என்னிரு கரங்களை
என்றும் கூப்பியே
மன்னிய உலகில்
மன்னும் வரையில்
எண்ணியே தொழுவேன்
இணையில் உறவுமை
கண்ணின் மணியெனக்
கருதியே வாழ்வேன் !
சுயநலம் கருதா
சொந்தங்கள் நீரே
பயனெதிர் பாரா
பண்பினர் நீரே
நயமது
மிக்க நண்பினர் நீரே
செயல்பட என்னைச்
செய்தவர் நீரே !
எண்பது வயதைத்
தாண்டியே இருப்பதும்
உண்பதும் உறங்கலும்
உம்மிடை இருப்பதும்
என்புடை
தோலென என்னெடு இருப்பதும்
அன்புடை உம்மோர்
ஆதர வன்றோ !
இனியும் வாழந்திட
என்வலை வருவீர்
கனியென இனித்திடக்
கருத்தினைத் தருவீர்
பனிமலர் போன்றே
குளுமையும் தோன்ற
நனிமிகு
நாட்களும்! வாழ்வேன் நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனம் கனிந்த வாழ்த்துக்கள் பெருந்தகையே...
ReplyDeleteஇன்னும் பல்லாயிரம் படைத்திடுவீர்...
தமிழின் இனிமை சுவைக்க
வண்டுகளாய் நாங்கள் எப்போதும்
வந்துகொண்டே இருப்போம்....
மிக்க நன்றி!
Deleteஎண்பது வயதிலும் இந்த வலையுலகில் உறவாடி முன்னூற்று ஐம்பதாவது பதிவினைத் தந்திட்ட புலவர் அய்யாவுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇன்னும் பல படிகளைத் தாண்டி பேரும் புகழ்ச்சியும் பெறுவீர்கள் ஐயா. அருமையாக எங்களுக்கு நன்றி சொல்லிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் உங்கள் பதிவைத் தொடர்ந்து வருவோம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Delete350 பதிவுகளா, இந்த வயசுலேயும் இந்த வேகம். நன்றி :-)))
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபயனெதிர் பாரா பண்பினர் நீரே//அருமையாக சொல்லிருக்கிறீர்கள் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் ஐயா 350 பதிவுகளை தந்ததற்கு! இன்னும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅழகான கவிதையும் அழகான நினைவுகூறலும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல வெற்றிப் பதிவுகளுடன் தொடர
சிறப்பான வகையில் நன்றி கூறி
ReplyDeleteஉள்ளீர்கள் . இன்னும் இன்னும்
என எண்ணும் படி இருக்கிறது
கவிதை. நன்றி !
மிக்க நன்றி!
Deleteஐயா தங்களின் ஆசியும் ஆர்வமும் எங்களுக்கும் கிடைக்க ஆசிர்வதியுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் எங்களையும் தொற்றி சிறக்க வாழ்த்துங்கள் ஐயா! வணங்குகிறேன்!
ReplyDeleteஐயா அடுத்தடுத்த வருடங்களில் ஐநூறும் பின் ஆயிரம் பதிவுகளும் தாண்டி தாங்கள் எழுத வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கெல்லாம் கண்ணைக் கட்டுது அடிக்கடி! :-))
ReplyDeleteவாழ்க ஐயா! என்றும் உங்களது வழிகாட்டுதல் வேண்டும்!
மிக்க நன்றி!
Deleteதங்கள் கவித் திறனை பதிவிலும்
ReplyDeleteஈகைத் திறனையும் சிறியன சிந்தியா தன்மையும்
நேரில் கண்டும் பெரும் மகிழ்வு கொள்கிறேன்
பதிவுகள் பல்லாயிரமாய் தந்து
எம் போன்றோர்க்கு வழிகாட்ட அன்புடன்
வேண்டுகிறேன்
மிக்க நன்றி!
Deletetha.ma 10
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்கள் வேகம் வியக்க வைக்கின்றது. தங்கள்ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கின்றோம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநீடூடி வாழ்ந்து எங்களையும் வாழ்த்துங்கள் புலவர் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாழ்த்துகள் புலவர் ஐயா. இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி எங்களையும் வழிநடத்திட வேண்டும்....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்கள் வயதில் இது ஒரு பெரிய சாதனை ஐயா.
ReplyDeleteஇளம்பதிவர்களுக்கெல்லாம் தாங்கள் ஒரு சிறந்த முன்னோடியாக விளங்குகிறீர்கள்.
இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
Deleteஅருமை. இன்னும் பல கவி படைக்க, வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇந்த வயதிலும் இத்தனை சுறு சுறுப்பா. நல்ல விஷயம்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!
Delete350 எல்லாம் உங்கள் இளமை வேகத்துக்கு ஜுஜுபி! இறை அருளால் பதிவிலும் ஆயிரம் காண வாழ்த்துகிறேன்
ReplyDelete
ReplyDeleteThanks for sharing, nice post! Post really provice useful information!
Hương Lâm chuyên dịch vụ thuê máy photocopy tại quận 1 cũng như dịch vụ thuê máy photocopy Nhà Bè và dịch vụ thuê máy photocopy tại quận 2 cũng như dch5 vụ thuê máy photocopy quận 4 uy tín, giá rẻ