Thursday, January 17, 2013

அணிந்துரை.! கவியாழி கண்ணதாசனின் நூலுக்கு!


                                 அருமை  நண்பர்  கவியாழி கண்ணதாசனின்
அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும்  தருவாயா  என்ற  நூலுக்கு
 நான்  எழுதிய   அணிந்துரை.






புலவர் சா இராமாநுசம்  
புலவர் குரல் வலைப்பதிவு
மதிப்பியல் தலைவர்
தமிழகத் தமிழாரிரியர் கழகம்


              இக்கவிதை  நூலின் ஆசிரியர், என இனிய நண்பர்  கவியாழி கண்ணதாசன் அவர்கள் கவிதைகள் எழுதுவதில் காட்டுகின்ற ஆர்வம்
என்னை மிகவும் வியப்படையச் செய்யும்

          இன்றைய வலையுலகில் ,  மிக மிக குறுகியகாலத்தில், தன்
பெயரிலேயே , ஒரு வலைப்பதிவினைத் தொடங்கி, இவ்வாறு நூல்
வெளியிடும்  அளவிற்கு பல கவிதைகளைப் படைத்த ஆற்றலைக்
கண்டு நான் மெத்தவும் மகிழ்வதோடு பெரிதும் பாராட்டவும் கடமைப்
பட்டுள்ளேன்.

           மரபுக் கவிதைள்  எழுதுவது கடினம் என்ற நிலையில் இன்று
புதுக்கவிதைகள்  எழுதுவோர் எண்ணிக்கையில்  அதிகரித்து விட்டனர்
என்பது மறுக்க இயலாத உண்மை. அவ்வரிசையிலே ஒருவர்தான் நண்பர்
கண்ணதாசன். இவரது  ஆர்வமும், ஆற்றலும் மேலும், மேலும் வளரும்
என்பதிலே எனக்கு ஏதும் ஐயமில்லை

          எனவே அவர் எழுதியுள்ள கவிதைகளில், சில இடங்களில்
உள்ள, சில வரிகளை இங்கே, சுட்டிக் காட்ட  விரும்புகிறேன்.

        சாதி(தீ) என்ற கவிதையில் அவர் சாதி மத பேதங்களை
மிகவும் சாடியதோடு

        மனிதத்தைப் போற்றினால்
        மதமென்ன தடையாசொல்லும்  
என்று கேட்கும் கேள்வி அனைவரும்    சிந்திக்கத் தக்கது

        தமிழை மணந்து  என்ற  தலைப்பில அவர் எழுதியுள்ள
கவிதையில் காணப்படும் அவரது தன்னடக்கப் பண்பும், தன் கவிதைகளைப்
படித்து, மறுமொழி இடும் வலையுலக உறவுகள்பால் அவர் கொண்டுள்ள
பற்றும் பாசமும் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

        சமுதாய தொண்டு என்ற நோக்கோடு பல கவிதைகள்  எழுதியுள்ளார்
அவற்றில் குறிப்பிட தக்கன....
      
        உடல் தானம் செய்வீர், கல்வி (காசுபார்போரின்)கடவுள், ஆயுத பூசை
மகிழ்ச்சியா நிகழ்ச்சியா, போன்ற கவிதைகளைப் படித்து சுவைக்கலாம்
         மேலும், காதல் சுவை சொட்ட  இவர் எழுதியுள்ள கவிதைகள், நூலில் பலவற்றை  நீங்கள் படித்து  மகிழலாம் 

        சுருக்கமாகச் சொன்னால்,  இவர் தன்னுடைய பெயரைக் கண்ணதாசன் என்பதை விட கவிதை தாசன்  என்று வைத்துக் கொண்டால்
கூட  பொருத்தமானதே என்பது என்கருத்து
       
       முடிவாக இவரது ஆற்றல் வளரவும்  ஆர்வம் பெருகவும்  எல்லாம்
வல்ல வேங்கடவனை வணங்கி வாழ்க என வாழ்த்துகிறேன்
                                                              புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. தங்களின் அணிந்துரையே கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதைத் தொகுப்பை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது தங்களின் ஆசி பெற்ற அவர் மென்மேலும் எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அணிந்துரையே கவியாழியின் கவிதைக்கு மகுடமாய் இருக்கிறது.... அருமை ஐயா.

    ReplyDelete
  3. தங்களின் ஆசி கவிதைக்கு மகுடமாய் இருக்கிறது

    ReplyDelete
  4. அணிந்துரையே கவிதை நடையில் உள்ளது

    ReplyDelete
  5. புலவர் ஐயாவிற்கு,
    வணக்கம்.
    அனுபவம் வாய்ந்த உங்கள் மோதிரக்கையால் ஆசிகள் பெற்ற திரு கவியாழி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...