Tuesday, May 14, 2013

அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு நினைவஞ்சலி!



அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு
நினைவஞ்சலி
----------------------------

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கநீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
    ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?
    நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    ReplyDelete
  2. அன்னை அவள் நினைவில் மூழ்கினோம்....

    ReplyDelete
  3. உணர்வு பூர்வமான வரிகள் அய்யா. ஈடு இணை அற்ற உறவல்லவா தாய்மை

    ReplyDelete
  4. ஈன்ற தாயின் பிரிவை விட கொடியது எதுவுமில்லை.சோகம் நிரம்பியிருப்பினும் வரிகள் ரசிக்கவைத்தன

    ReplyDelete
  5. இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
    ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?
    நானும் கேட்கிறேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...